Advertisment

இந்தியாவிற்கு நிதியுதவி; மூன்றாக பிரித்து அளித்த ட்விட்டர்!

twitter ceo

Advertisment

இந்தியாவில் கரோனாபாதிப்பு மோசமடைந்துள்ளது. இதனையடுத்து உலகின் பல்வேறு நாடுகளும் இந்தியாவிற்கு ஆக்சிஜன், ஆக்சிஜனை தயாரிக்கும்உபகரணங்கள், வெண்டிலேட்டர்கள் உள்ளிட்ட மருத்துவ சாதனங்கள், மருந்துகள் ஆகியவற்றை வழங்கி உதவிவருகின்றன.

அதேபோல், பைசர் மருந்து தயாரிப்பு நிறுவனம், கூகுள், மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட நிறுவனங்களும் இந்தியாவிற்குஉதவி அறிவித்தன. இந்நிலையில், பிரபல சமூகவலைதளமான ட்விட்டர் இந்தியாவிற்கு உதவிக்கரம் நீட்டியுள்ளது. அந்தநிறுவனம் சார்பில் 15 மில்லியன் அமெரிக்க டாலர்கள் இந்தியாவிற்கு வழங்கப்படும் என அந்த நிறுவனத்தின்தலைமைச் செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

15 மில்லியன் அமெரிக்க டாலர் என்பது இந்திய மதிப்பில் 110 கோடி ரூபாயாகும். இந்த நிவாரணத்தொகையை மூன்றாகப் பிரித்து கேர், எய்ட்இந்தியா, சேவா இன்டர்நேஷனல் யூ.எஸ்.ஏ ஆகிய மூன்று அமைப்புகளுக்குப் பிரித்து ட்விட்டர் நிறுவனம்வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

corona virus relief twitter
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe