Advertisment

ஈரானில் இரட்டை குண்டு வெடிப்பு; 70 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

Twin incident in Iran; More than 70 people issue

ஈரானில் நடந்த இரட்டைக் குண்டு வெடிப்பில் 70 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

தெற்கு ஈரானின் கெர்மான் நகரில் உள்ள சாக்ஹேப் அல் ஜமான் மசூதி அருகே அடுத்தடுத்த குண்டு வெடிப்பு தாக்குதல் நடந்துள்ளது. இந்த இரட்டை குண்டு வெடிப்பில் 70 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாகவும், 150 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த இரட்டை குண்டுவெடிப்பு சம்பவம் தீவிரவாத தாக்குதல் என ஈரான் அரசு தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

அமெரிக்க படையினரால் நடத்தப்பட்ட டிரோன் தாக்குதலில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஈரான் ராணுவ ஜெனரல் காசீம் சுலைமானி படுகொலை செய்யப்பட்டார். அவரின் உடல் ஈரானில் உள்ள கெர்மான் என்ற இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அவரின் 4 ஆம் நினைவு நாளில் அவரது கல்லறையில் ஏராளமான பொதுமக்கள் அஞ்சலி செலுத்த கூடியிருந்தபோது, கல்லறை அருகே குண்டு வெடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

incident iran
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe