trump

கடந்த வாரம் அமெரிக்கா துருக்கியின் இரும்பு மற்றும் அலுமினியத்துக்கான இறக்குமதியை அதிகரித்தது. இதனால் துருக்கியின் பணமதிப்பு வெகுவாகச் சரிந்தது.

Advertisment

இதுகுறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், "துருக்கியிலிருந்து இறக்குமதியாகும் இரும்பு மற்றும் அலுமினியத்துக்கான இறக்குமதி வரியை இரண்டு மடங்கு உயர்த்தியுள்ளேன். நம்முடைய வலுவான டாலருக்கு முன், துருக்கியின் லிரா(துருக்கி பணம்) சரிந்துள்ளது. துருக்கியுடனான நமது உறவு சுமுகமாக இல்லை" என்று கூறியிருந்தார்.

Advertisment

இந்நிலையில், துருக்கிக்கு இறக்குமதி செய்யப்படும் அமெரிக்க பொருட்களுக்கு வரியை துருக்கி அதிகரித்து அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்துள்ளது.

இதுகுறித்து வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளர் சாரா சாண்ட்ரஸ் கூறுகையில்,"இந்த முடிவுக்கு துருக்கி நிச்சயம் வருத்தப்படும். வரியை உயர்த்தி துருக்கி தவறான முடிவை எடுத்துள்ளது" என்று

எச்சரித்துள்ளார்.சீனாவைத்தொடர்ந்து துருக்கி அமெரிக்காவின் இறக்குமதி பொருட்களுக்கு அதிக வரி விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.