turkey earthquake updates

துருக்கியில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமி காரணமாக 22 பேர் பலியாகியுள்ளதாகவும்,700க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

துருக்கி கடல் பகுதியில்நேற்று மாலைநிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து சுனாமி ஏற்பட்டது. ரிக்டர் அளவில் இது ஏழாக பதிவானது.இந்த நிலநடுக்கத்தின் காரணமாக துருக்கியின் பல பகுதியில் கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன. குறிப்பாக போர்னோவா, பைராக்சி ஆகிய நகரங்களிலும் ஏராளமான கட்டிடங்கள் நிலநடுக்கத்தால் சேதம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நிலநடுக்கத்தால் சேதம் அடைந்துள்ள கட்டிட இடிபாடுகளுக்குள் அதிகமானோர் சிக்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியான நிலையில், இதுவரை 22 பேர் பலியாகியுள்ளதாகவும், 700க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், கட்டிட ஈடுபாடுகளில் இன்னும் ஏராளமானோர் சிக்கியுள்ளதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்ற அச்சம் நிலவும் சூழலில், வீடுகளை இழந்த ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

Advertisment