இந்தோனேசியாவை தாக்கிய சுனாமி - பலி எண்ணிக்கை 281 ஆக உயர்வு

t

இந்தோனேசியாவை சுனாமி தாக்கியதில் பலி எண்ணிக்கை 281 ஆக உயர்ந்துள்ளது.

இந்தோனேசியாவில் கடந்த சனிக்கிழமை இரவு சுனாமி ஏற்பட்டதில் பலியானோர், காயமடைந்தவர்கள் மற்றும் மாயமானவர்களில் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்தோனேஷியாவின் ஜாவா, சுமத்ரா தீவுகளுக்கு இடையே அமைந்துள்ள கிரகதோ எரிமலை வெடித்து சிதறியது. இதனைத் தொடர்ந்து கடலோர பகுதிகளை சுனாமி தாக்கியது. 10 அடி உயரத்திற்கும் அதிகமாக சீறி பாய்ந்த அலைகள் குடியிருப்புகளுக்குள் புகுந்தது.இதில் பலியானவர்களின் எண்ணிக்கை தற்போது 281 ஆக அதிகரித்துள்ளது. 843 படுகாயம் அடைந்துள்ளதாகவும், 28 பேர் மாயமாகி உள்ளதாகவும் அந்நாட்டு அரசு தகவல் தெரிவித்துள்ளது. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருவதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

Tsunami in Indonesia
இதையும் படியுங்கள்
Subscribe