அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் சிலை ஒன்றைதற்போது ஏலத்திற்கு விடப்போவதாக அமெரிக்காவின்ஜூலியன் ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தசிலையானதுட்ரம்ப் நிர்வாண நிலையில் உள்ள சிலையாகும்.

Advertisment

Trump - naked

இதுகுறித்து ஜூலியன் ஏல நிறுவனம், "இது போன்ற சிலைகள்,ட்ரம்ப்குடியரசு கட்சிக்கானஅதிபர் வேட்பாளராக போட்டியிட்ட பொழுது நியூயார்க், சான் பிரான்சிஸ்கோ, லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் க்ளீவ்லாண்ட் ஆகிய பகுதிகளில் வைக்கப்பட்டிருந்தன. அந்த சிலைகளெல்லாம் சேதமடைந்தும், உடைந்தும் விட்டது. இந்த சிலை ஒன்றுதான் தற்போது நல்ல நிலையில் உள்ளது.'இன்டிக்லைன்' என்ற அமைப்பினால்உருவாக்கப்பட்ட இந்த சிலை 20000 டாலரிலிருந்து 30000 டாலர் வரை விலை போகும் என ஏல நிறுவனம் கணக்கிட்டுள்ளது.இந்த சிலையின் ஏலமானது வரும் மே 2 ஆம் தேதி நியூ ஜெர்சியில், ஜெர்சி சிட்டியில் நடைபெறவுள்ளது.