Advertisment

வடகொரிய அதிபர் கிம் ஜாங்கை நேரில் சந்திக்க இருக்கும் டொனால்டு ட்ரம்ப்!

பல்வேறு வார்த்தைப் போர்களுக்குப் பின்னர், சமீபத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்-ஐ சந்திக்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisment

Kim

வடகொரியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையே கடந்த சில மாதங்களாக வார்த்தைப் போர் நிலவிவந்தது. இரு நாட்டு அதிபர்களும் ஒருவரையொருவர் கடுமையான வார்த்தைகளால் திட்டிக்கொண்டனர். இதனால், அமெரிக்கா மற்றும் கொரிய தீபகற்பத்தில் போர்ப்பதற்றம் நிலவியது. இந்நிலையில், சமீபத்தில் தென் கொரியாவைச் சேர்ந்த அமைதிப் பேச்சுவார்த்தைக் குழு வடகொரியா தலைநகர் பியாங்யாங்கிற்கு சென்று அங்குள்ள அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து தென்கொரியா நாட்டின் பாதுகாப்பு ஆலோசகர் சுங் இ யேங், ‘வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை நேரில் சந்திக்க ஆர்வமாக இருப்பதாக விருப்பம் தெரிவித்துள்ளார். இவர்களுக்கு இடையிலான சந்திப்பு மே மாதம் நடைபெறும், தேதி கூடிய விரைவில் முடிவு செய்யப்படும். மேலும், கிம் அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணை சோதனைகளை நடத்துவதை நிறுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்’ கூறியுள்ளார்.

Advertisment

இதை உறுதிசெய்யும் விதமாக தனது ட்விட்டர் பக்கத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ‘அணுஆயுத சோதனை நிறுத்தம் குறித்து தென்கொரிய அதிகாரிகளுடன் கிம் ஜாங் உன் பேசியிருக்கிறார். இந்தக் காலகட்டத்தில் வடகொரியா ஏவுகணை சோதனை கூட நடத்தக்கூடாது. பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால், இது ஒப்பந்தமாகும் வரை வடகொரியா மீதான தடைகள் தொடரும். சந்திப்பிற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.’ என பதிவிட்டுள்ளார்.

Donad trump Kim Jong un North korea
இதையும் படியுங்கள்
Subscribe