Advertisment

டிரம்ப் ஒரு ''ஈரமான நூடுல்ஸ்'' -டிரம்பை திட்டிய அர்னால்ட் வைரல் வீடியோ!!

ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் அமெரிக்க அதிபர் டிரம்பை '' ஈரமான நூடுல்ஸ்" என திட்டி ட்விட்டரில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

Advertisment

உலகமே எதிர்பார்த்துக்கொண்டிருந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் புதின் சந்திப்பு,பின்லாந்து நாட்டிலுள்ள ஹெல்ஸின்கியில் நேற்று நடைபெற்றது.

Advertisment

trump

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

பலமணி நேரம் இருவருக்குமான சந்திப்பு உரையாடல் நிகழ்ந்தது. இந்த சந்திப்புக்கு பிறகு நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பல கேள்விகள் முன்வைக்கப்பட்டது. அதில் ''அமெரிக்க தேர்தலில் ரஷ்யா தலையிட்டதாக தமது சொந்த புலனாய்வு அமைப்பு கூறுவதை டிரம்ப் ஏற்கிறாரா ? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அந்த கேள்விக்கு பதிலளித்த ட்ரம்ப் ''தலையிடவில்லை என புதின் கூறியுள்ளார். அவர் கூறியதுபோலவே தலையிடுவதற்கு காரணம் இருப்பதாக எனக்கு தெரியவில்லை என பதிலளித்தார்.

இப்படி தமது சொந்த புலனாய்வை எதிர்த்து ரஷ்ய அதிபர் புதினின் கருத்துக்கு ஆதரவளித்த டிரம்பின் இந்த பேச்சுக்கு அமெரிக்காவில் கண்டனங்கள் எழுந்துவருகின்றன. அதுமட்டுமின்றி அமெரிக்க நாடாளுமன்ற மக்களவை அவை தலைவர்பவுல் ரய்யான் '' ரஷ்யா அமெரிக்காவின் நட்பு நாடல்ல'' என டிரம்ப் உணர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். அதுபோல் சொந்த கட்சி உறுப்பினர்களே அதிபர் டிரம்பின் இந்த செயலுக்கு வலுத்த கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இப்படி கண்டனங்கள் மேலுக்கு மேல் வலுத்துவர தற்போது புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகரான அர்னால்ட் ஒரு வீடியோ ஒன்றை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் அந்த வீடியோவில்

அந்த சந்திப்பு கூட்டத்தில் டிரம்ப் ஒரு சிறுவயது ரசிகனைபோல கைகட்டிக்கொண்டு நிற்கிறார், ஒரு ஈரமான நூடுல்ஸ் போல நிற்கிறார். அவர் சொல்வதற்கெல்லாம் தலையசைத்தபடி. தமது சொந்த புலனாய்வு அமைப்பு கூறியதை டிரம்ப் ஏற்கமறுத்து புதினுக்கு ஆதரவாக பேசியது தவறு என கண்டித்து பேசியுள்ளார் அர்னால்ட். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

condemns Donad trump
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe