
உலகம் முழுவதும் கரோனாதொற்று பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்காவிலும் அதன் பாதிப்பு அதிகரித்துள்ளது. தற்பொழுதுவரை அங்கு உயிரிழப்புஒரு லட்சத்து 34 ஆயிரத்தைக் கடந்துள்ள நிலையில் இதுவரை முகக் கவசம் அணியாமல்இருந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று முகக் கவசம் அணிந்த படி வெளியே வந்தார்.
காயம் அடைந்த ராணுவ வீரர்களை பார்வையிட வந்த பொழுது டிரம்ப் கருநீல வண்ணம் கொண்ட முகக்கவசம் அணித்திருந்தார். அதற்கு முன்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ''தான் முகக் கவசத்திற்கு எதிரான நபர் அல்ல, ஆனால் எந்த இடத்தில் முகக் கவசத்தை அணிய வேண்டும், எந்தச் சூழலில் அணிய வேண்டும் என்பதை அறிந்தவர்'' எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பொழுது ட்ரம்பின் ஆதரவாளர்கள் முகக் கவசம் அணியாமல் கூட்டத்தில் கலந்துகொண்டதன் காரணமாக கரோனா பரவல்அதிகரித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்ததே ட்ரம்பின்இந்தத் திடீர்மாற்றத்திற்குக் காரணம் எனவும் தகவல்கள் கசிந்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2021-09/fountain-pen-handwriting-012.jpg)