trump says biden as not competent

Advertisment

ஜோ பிடென் அமெரிக்க அதிபரானால் அவர் நாட்டையே அழித்துவிடுவார் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் இந்தாண்டு இறுதியில் நடைபெற உள்ள நிலையில், இத்தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் போட்டியிட உள்ளார் என்பது முன்னரே உறுதிசெய்யப்பட்ட நிலையில், அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடென் போட்டியிட உள்ளார். இந்நிலையில் தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்குப் பேட்டியளித்த ட்ரம்ப்பிடம், ஜோ பிடெனுக்கான வெற்றிவாய்ப்பு அதிகமிருப்பதாகக் கருத்துக்கணிப்புகள் கூறுவது குறித்துக் கேள்வியெழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த அவர், நாட்டை வழிநடத்தும் அளவுக்கு ஜோ பிடென் திறமையானவர் அல்ல. நவம்பர் தேர்தலில் ஜோ பிடென் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் அவர் நாட்டையே அழித்து விடுவார் எனத் தெரிவித்துள்ளார்.