/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/modi with trump.jpg)
நியூயார்க் நகரில் இருக்கும் ஐநா தலைமையகத்தில், 73வது பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இரண்டு வாரம் நடக்கும் இந்த கூட்டத்தில் பல்வேறு உலகத் தலைவர்கள் கலந்துகொள்கின்றனர். இந்தியா சார்பில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கலந்து கொள்கிறார்.
இந்நிலையில், உலக போதை பொருள் விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பதற்கான உலகளாவிய கூட்டம் ஒன்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தலைமையில் இன்று நடைபெற்றது. அப்போது சுஷ்மா சுவராஜை ட்ரம்ப் சந்தித்தார். அப்போது ட்ரம்ப், ”நான் இந்தியாவை மிகவும் நேசிக்கின்றேன். மோடியிடம் என் அன்பை தெரிவியுங்கள்” என்று கூறியுள்ளார். இதற்கு முன்பாக சுஷ்மா சுவராஜும், ”பிரதமர் நரேந்திர மோடியிடம் இருந்து அன்பினை பெற்று வந்துள்ளேன்” என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow Us