Skip to main content

நாங்கள் இருவரும் லவ் பண்றோம் -ட்ரம்ப்

Published on 01/10/2018 | Edited on 01/10/2018
trump


அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் இவர்கள் இருவரும் தொடக்கத்தில் எலியும் பூனையுமாக இருந்து வந்தனர். பின்னர், இரு அதிகபர்களுக்கும் நல்லவிதமாக பேச்சு வார்த்தை நடந்தது. கடந்த ஜூன் மாதம் இருவரும் சிங்கப்பூரில் உலகமே திரும்பி பார்க்கும் வகையில் நேரில் சந்தித்து, சில ஒப்பந்தங்களும் போட்டுக்கொண்டனர். 
 

இதனை தொடர்ந்து கிம், ட்ரம்புக்கு கடிதங்கள் எழுதி வருவதாகவும். மீண்டும் இருவரும் நேரில் சந்திக்க இருப்பதாகவும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அதிபர் ட்ரம்ப் வெர்ஜீனியா மாகாணத்தில் குடியரசு கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக பேசினார். இதுபற்றி கூறிப்பிட்டார் அப்போது, ”நாங்கள் இருவரும் காதலில் விழுந்துவிட்டோம். அவர் எனக்கு அற்புதமான கடிதங்கள் எழுதுகிறார். நாங்கள் இருவரும் காதலில் விழுந்துவிட்டோம்” என்றார். 
 

சார்ந்த செய்திகள்

Next Story

“என் நாட்டுப் பெண்களே... தயவுசெய்து...” - கண்ணீருடன் கோரிக்கை வைத்த வடகொரிய அதிபர்

Published on 06/12/2023 | Edited on 06/12/2023

 

"Have more children" - North Korean leader cries in front of women

 

பல விசித்திரமான சட்டங்களைக் கொண்டு வரும் வடகொரியா அதிபர் கிம்ஜாங் உன், வடகொரியா பெண்கள் அதிக குழந்தைகளை பெற்றெடுக்க வேண்டும் என்று கூறி மேடையிலேயே கண்கலங்கிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

 

அவ்வப்போது சர்ச்சையில் சிக்கும் நாடுகளுக்கு மத்தியில் எப்போதும் சர்ச்சைக்குள்ளேயே சிக்கியிருக்கும் நாடு வடகொரியா. அதேபோல சர்ச்சையில் சிக்கிக் கொள்பவர் அந்நாட்டு அதிபர் கிம்ஜாங் உன்.  ஐ.நா உள்ளிட்ட உலகின் எந்த அமைப்புக்கும் கட்டுப்படாமல் செயல்பட்டு வரும் கிம்ஜாங் உன், அண்டை நாடுகளான ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகளை மிரட்டும் வகையில் அவ்வப்போது ஏவுகணைகளை ஏவி பயமுறுத்தி வருகிறார். அதோடு மட்டுமல்லாமல், அமெரிக்காவின் எதிர்ப்பை மீறி அடிக்கடி பல்வேறு ஏவுகணை சோதனைகளை அவர் நிகழ்த்தி வருகிறார். சர்வாதிகாரத்திற்கும், அடக்குமுறைக்கும் பேர் போன வடகொரிய அதிபர் கிம்ஜாங் உன், நேற்று (05-12-23) பொதுமக்களிடம் உரையாற்றிக் கொண்டிருக்கும்போது அழுதது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

வடகொரியாவில் நேற்று நடைபெற்ற பெண்கள் மாநாட்டில் அதிபர் கிம்ஜாங் உன் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர், “கட்சி மற்றும் மாநிலப் பணிகளைக் கையாள்வதில் எனக்கு சிரமம் ஏற்படும்போது நான் எப்போதும் தாய்மார்களைப் பற்றி நினைப்பேன். நம் நாட்டில் குழந்தை பிறப்பு விகிதம் மிகவும் குறைந்து வருகிறது. இது வடகொரியாவின் எதிர்காலத்துக்கே ஆபத்து. இதனைத் தடுத்து நிறுத்தும் வல்லமை நமது நாட்டுப் பெண்களுக்கு மட்டுமே உள்ளது. 

 

பெண்கள் அதிக அளவிலான குழந்தைகளைப் பெற்றெடுக்க வேண்டும். தாய்மையின் பலத்தை நாம் காட்ட வேண்டும். அவர்களை சிறந்த குடிமக்களாக வளர்க்க வேண்டும். அவர்களுக்கு முறையான கல்வி வழங்க வேண்டும்” என்று பேசினார். இப்படி பேசிக்கொண்டிருக்கும்போது, கிம்ஜாங் உன் திடீரென்று கண் கலங்கினார். இதையடுத்து, அவர் தனது கையில் இருந்த வெள்ளை நிற கைக்குட்டையை எடுத்து துடைத்துக் கொண்டார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

 

 

Next Story

ரஷ்யா- வடகொரியா அதிபர்கள் சந்திப்பு; ஆயுத பரிமாற்றத்திற்கு ஒப்பந்தம்?

Published on 13/09/2023 | Edited on 13/09/2023

 

Russia-North Korea Presidents Meet for Arms Transfer Agreement?

 

ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் 18 மாதங்களை கடந்து தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனால், ஏராளமான ஆயுதங்களை செலவழித்த ரஷ்யாவிற்கு ஆயுத உதவி தேவைப்படுவதாக கூறப்படுகிறது. இதனிடையே, வட கொரியா உடன் ரஷ்ய வடிவமைப்பைக் கொண்டு உருவாக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான பீரங்கி குண்டுகள், ஆயுதங்கள், மற்றும் ராக்கெட்டுகள் இருக்கின்றன. இதனால், வட கொரியாவிடம் இருந்து ஆயுதங்களை பெற வேண்டும் என ரஷ்யா அதிபர் விளாதிமிர் புதின் ஆர்வம் காட்டி வருகிறார் என்று கூறப்பட்டது.

 

இதற்கிடையே, வட கொரியா அதிபர் கிம் ஜான் உங், ரஷ்ய அதிபரை சந்திக்க இருப்பதாக ரஷ்ய ஊடகங்கள் சில நாள்களுக்கு முன் தெரிவித்திருந்தன. மேலும்,  உக்ரைனுக்கு எதிராக ரஷ்யாவுக்கு ஆயுதங்கள் வழங்குவது தொடர்பாக இரு நாட்டுத் தலைவர்களிடையே இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக ரஷ்யா நாட்டு ஊடகங்கள் தெரிவித்திருந்தன. அதே போல், தென் கொரியா ஊடகங்கள், வடகொரியா அதிபர் கிம், ரஷ்யா புறப்பட்டு சென்றுவிட்டதாக வெளியிட்டிருந்தது. ஆனால், இது குறித்து, வட கொரியா ஊடகம் எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடவில்லை. 

 

இந்த நிலையில், வட கொரியா அதிபர் கிம் ஜான் உங் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினை சந்திக்க பாதுகாப்பு வசதி கொண்ட சிறப்பு ரயில் மூலம் நேற்று ரஷ்யாவுக்கு சென்றுள்ளார்.  கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு  வடகொரிய அதிபர் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் ரஷ்யா தான். அதனால், இந்த சந்திப்புகளிடையே முக்கிய பேச்சு வார்த்தை நடக்கலாம் என்று உலக நாடுகள் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிறது. மேலும், இரு நாடுகளுக்கு இடையேயான ஆயுத ஒப்பந்தம் கையெழுத்தானால் ரஷ்யா- உக்ரைன் இடையேயான போர் நீடிக்க வாய்ப்புள்ளது என்றும் அஞ்சப்படுகிறது.

 

இதற்கிடையே, ரஷ்யாவிற்கு ஆயுதங்களை வழங்கி அதற்கு பதிலாக எரிசக்தி, அதி நவீன ஆயுத தொழில்நுட்பம் ஆகியவற்றை பெற வடகொரியா அதிபர் கிம் திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டது. இதன் மூலம் அமெரிக்காவிற்கு எதிரான வல்லமை கொண்ட நாடாக காட்டிக்கொள்ளவும் வடகொரியா அதிபர் கிம் திட்டமிட்டு வருவதாக கூறப்பட்டது. ஆயுத பரிமாற்றம் நடக்கலாம் என்பதாலும், தற்போது உக்ரைன்- ரஷ்யா இடையே போர் நடைபெற்று வருவதாலும், இரு நாட்டு அதிபர்களின் சந்திப்பு உலக நாடுகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.