"இந்தியா, சீனா பிரச்சனையில் உதவி செய்ய தயார்" -அதிபர் ட்ரம்ப்

trump ready to help in india china border issue

இந்தியா, சீனா இடையேயான பிரச்சனையை தீர்க்க அமெரிக்கா உதவவதற்கு தயாராக இருப்பதாக அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்திய, சீன எல்லைப்பகுதியில் கடந்த 15 ஆம் தேதி ஆண்டு நடைபெற்ற மோதலுக்குபின் இருநாட்டு உறவு மோசமான நிலையைஎட்டியுள்ளது. ஒருபுறம் சமாதான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றாலும் மறுபுறம் ஆயுதக்குவிப்பு, ராணுவ பயிற்சிகளும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த பிரச்சனை குறித்து பேசியுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இந்தியா, சீனா இடையேயான எல்லைப்பிரச்சனையை தீர்க்க அமெரிக்கா உதவவதற்கு தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில் இதுகுறித்து பேசிய ட்ரம்ப், "இந்தியா, சீனா எல்லை பிரச்சனையால் பதற்றம் அதிகரித்து இருப்பது கவலையளிக்கிறது. இந்த மோசமான சூழலில், நாங்கள் இரு நாடுகளுடனும் பேசி வருகிறோம். இது மிகவும் கடினமான சூழல். இரு நாடுகளுக்கு இடையிலான பிரச்சனையை தீர்க்க உதவி செய்வோம். எல்லை பிரச்சனையை தீர்த்து பதட்டத்தை தணிக்க சீனா, இந்தியாவுக்கு உதவுவோம். அதற்காக அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது" என தெரிவித்துள்ளார்.

china LADAK
இதையும் படியுங்கள்
Subscribe