ADVERTISEMENT

அதிரடியாக திரும்பி வரும் ட்ரம்ப் - ஆலோசகர் தகவல்!

07:03 PM Mar 22, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடந்தாண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன், புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது தேர்தல் வெற்றியை அங்கீகரிக்க அமெரிக்க நாடாளுமன்றம் கூடியது. அப்போது ட்ரம்பின் ஆதரவாளர்கள் நாடாளுமன்றக் கட்டிடத்திற்குள் புகுந்து கலவரத்தில் ஈடுபட்டனர். போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தி கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இதனைத் தொடர்ந்து, ட்ரம்ப் வன்முறையைத் தூண்டியதாகக் கூறி ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்கள், ட்ரம்பின் அனைத்துக் கணக்குகளையும் முடக்கின. இதன்பிறகு ட்ரம்ப் சமூகவலைதளங்களை விட்டு விலகியிருந்தார். இந்தநிலையில், அவர் மீண்டும் சமூகவலைதளத்திற்குத் திரும்பவுள்ளார். ஆனால், அவர் திரும்பி வரவுள்ள சமூகவலைதளம் என்பது அவருக்குச் சொந்தமானது ஆகும்.

இதுகுறித்து ட்ரம்பின் மூத்த ஆலோசகர் ஒருவர், ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில், "ட்ரம்ப், அவரது சொந்த வலைதளம் மூலம், சமூகவலைதளத்திற்கான கட்டமைப்புக்குள் வரவிருக்கிறார். அது ஆட்டத்தையே மாற்றும் விதமாக இருக்கப்போகிறது" எனத் தெரிவித்துள்ளார். ட்ரம்ப் அதிபராக இருக்கும்போதே அவருக்கும், ட்விட்டர் நிறுவனத்துக்கும் மோதல் நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT