Advertisment

வாழ்க்கையில் மது குடித்ததே இல்லை - ட்ரம்பின் ஆச்சரியப்படுத்தும் உணவு முறைகள்!

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ட்ரம்ப் ஆகிய இருவரும் இரண்டு நாட்கள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளனர். குஜராத் மாநிலம் அகமதாபாத் நகருக்கு சென்ற ட்ரம்ப், அகமதாபாத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான மோதிரா கிரிக்கெட் அரங்கை பிரதமர் மோடியுடன் இணைந்து இருவரும் கூட்டாக திறந்து வைத்தனர். அதன்பின் பல்வேறு நிகழ்ச்சிகளில் ட்ரம்ப் பங்கேற்கிறார். இந்நிலையில் ட்ரப்பிற்கு குஜராத்தின் புகழ்பெற்ற இஞ்சி டீ அவருக்கு வழங்கப்பட்டது.

Advertisment

இந்நிலையில் ட்ரம்பின் உணவு பழக்கம் பற்றி தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது. ட்ரம்ப் தன் வாழ்நாளில் ஒருமுறை கூட மது அருந்தியது கிடையாதாம். மது அருந்திய தன்னுடைய சகோதரரையும் சண்டை போட்டு அந்த பழக்கத்தில் இருந்து நிறுத்தியுள்ளாராம். மேலும் காலை உணவு அருந்து பழக்கம் இல்லாத ட்ரம்ப் காலை உணவாக டயட் கோக் குடிப்பாராம். சிகரெட் குடிக்கும் பழக்கமோ, அல்லது போதை வஸ்துக்கள் பழக்கமோ ட்ரம்புக்கு சுத்தமாக இல்லையாம். ட்ரம்ப் ஒரு பீட்ஸா வெறியராம். எவ்வளவு அதிகமாக பீட்ஸாவை சாப்பிட முடியுமோ அவ்வளவு சாப்பிடுவாராம். உருளை கிழங்கு, மில்க் ஷேக் முதலியவற்றையும் அவர் விரும்பி சாப்பிடுவாராம்.

Advertisment
trump
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe