ஈரான் அமெரிக்கா இடையே பதட்டமான சூழல் நிலவி வரும் நிலையில், இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார்.

Advertisment

trump modi conversation over phone

இந்த உரையாடலின் போது இரு தலைவர்களும் பரஸ்பரம் புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உரையாடல் குறித்து அரசு தரப்பில் வெளியிடப்பட்டுள்ள தகவலில், அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அமெரிக்க நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும், பரஸ்பர மரியாதை மற்றும் நம்பிக்கையால் கட்டமைக்கப்பட்டுள்ள இந்தியா - அமெரிக்கா உறவு, தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வருவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

பரஸ்பர நலன்கள் அடிப்படையில் அனைத்து துறைகளிலும் இரு தரப்பு உறவை மேலும் வலுப்படுத்த டிரம்புடன் இணைந்து பணியாற்ற தனது விருப்பத்தையும் பிரதமர் மோடி தெரிவித்தார் என கூறப்பட்டுள்ளது. மேலும், டொனால்ட் டிரம்பை விட எந்த ஜனாதிபதியும் உங்களுக்கு இவ்வளவு ஒரு சிறந்த நண்பராக இருந்ததில்லை என டிரம்ப் தெரிவித்துள்ளார்.