ADVERTISEMENT

டிரம்ப்பை சந்தித்த சுந்தர் பிச்சை...

05:56 PM Mar 29, 2019 | kirubahar@nakk…

கூகுளின் செயல்பாடுகள் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப்பை நேரில் சந்தித்து கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை விளக்கமளித்தார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது அதிகாரபூர்வ சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "சுந்தருடன் அரசியல் சார்பு பற்றியும், கூகுள் நிறுவனம் அமெரிக்க நாட்டிற்கு செய்யக் கூடிய பல்வேறு திட்டங்கள் பற்றி பேசினேன். அவர் அமெரிக்க ராணுவத்திற்கு மட்டுமே முழு ஒத்துழைப்பு வழங்குவதாக தெரிவித்தார். இந்த சந்திப்பு மிகச்சிறப்பாக நிறைவுற்றது" என தெரிவித்திருந்தார். கூகுள் நிறுவன செய்தி தொடர்பாளர் இது பற்றி தெரிவிக்கையில், "கூகுள் சீன ராணுவத்துடன் பணியாற்றவில்லை. நாங்கள் அமெரிக்க அரசு மற்றும் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகத்துடன் இணைந்து சைபர்செக்யூரிட்டி, ஆரோக்கியம் மற்றும் வேலைவாய்ப்பு உள்ளிட்ட துறைகளில் பணியாற்றி வருகிறோம்" என கூறியுள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT