கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், வால்டர் ரீட் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் ஆலோசகர் ஹோப் ஹிக்ஸ்க்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து, அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ட்ரம்ப் கரோனா மருத்துவ பரிசோதனை செய்த நிலையில், இருவருக்கும் கரோனா உறுதியானது. இதையடுத்து, இருவரும் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டனர். இந்நிலையில், ட்ரம்ப்பின் உடல்நிலையைக் கருத்தில்கொண்டு அவர் வால்டர் ரீட் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், தனது உடல்நிலையும், தனது மனைவியின் உடல்நிலையும் சீராக இருப்பதாக ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.