Skip to main content

“ட்ரம்ப் என்னை காதலிக்கிறார்”- ட்ரம்பை கிண்டலடித்த பிரபல நடிகர் அர்னால்ட்

Published on 12/09/2019 | Edited on 12/09/2019

பிரபல ஹாலிவுட் நடிகரான அர்னால்ட், நடிப்பு மட்டுமின்றி அரசியலிலும் தீவிர ஈடுபாடு கொண்டவர். அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் குடியரசு கட்சியை சேர்ந்தவரான இவர், 2003 முதல் 2011ஆம் ஆண்டுவரை கலிபோர்னியா மாகாணத்தின் கவர்னராக இருந்துள்ளார்.
 

trump

 

 

ட்ரம்பும், அர்னால்ட்டும் ஒரே கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் இவர்கள் இருவரும் தொடக்கத்திலிருந்து கருத்தியல் ரீதியாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. குடியுரிமை உள்பட டர்ம்பின் சர்ச்சைக்குரிய திட்டங்களை அர்னால்ட் கடுமையாக விமர்சித்தார். அதே போல் டிரம்ப்பும், அர்னால்டின் கருத்துகளுக்கு பலமுறை கிண்டலாக பதிலளித்திருக்கிறார்.

இந்நிலையில் பிரபல அமெரிக்க இதழ் அண்மையில் அர்னால்டிடம் பேட்டி எடுத்தது. அப்போது அவரிடம், “உங்களுக்கும், டிரம்ப்புக்கும் இடையிலான பகைமையின் காரணம் என்ன? உங்கள் மீது அவர் கூறும் விமர்சனங்களுக்கு நீங்கள் என்ன பதில் கூறுகிறீர்கள்?” என்று கேட்கப்பட்டது. 

அதற்கு பதிலளித்த அர்னால்டு, “ட்ரம்ப் என் மீது காதல் கொண்டிருக்கிறார். அவர் என்னை போல் இருக்க விரும்புகிறார். இதுதான் உண்மை. மக்கள் அமெரிக்காவை எவ்வளவு தூக்கி வீசினாலும், மக்கள் ஜனாதிபதியை பார்த்து எவ்வளவு சிரித்தாலும் உலகெங்கிலும் உள்ள மக்கள் அமெரிக்கா வரவே விரும்புகிறார்கள். ஏனென்றால் அவர்களுக்கு நன்கு தெரியும். ஒரு மனிதர், ஒரு ஜனாதிபதியால் அமெரிக்கா மாறிவிடாது” என்று கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

புகாரளித்தும் நடவடிக்கை இல்லை; களத்தில் இறங்கிய அர்னால்ட்

Published on 13/04/2023 | Edited on 13/04/2023

 

No action on reporting; Arnold entered the field

 

தன் வீட்டருகே இருந்த சாலை பள்ளத்தை சீரமைக்க கோரி புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் ஹாலிவுட் நடிகர் அர்னால்டு சாலையில் இறங்கி சீரமைப்பு பணியில் ஈடுபடும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உலக பிரபல நடிகரான அர்னால்டு வசித்து வருகிறார். அவர் வசித்து வரும் வீட்டின் அருகே உள்ள பகுதியில் உள்ள சாலையில் பள்ளம் ஒன்று இருந்தது. இதனால் அடிக்கடி அந்தப் பகுதியில் விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து புகாரளித்து மூன்று வாரங்களாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

 

இதனால் களத்தில் இறங்கிய நடிகர் அர்னால்ட் தார் கலந்த ஜல்லியை கொட்டி அந்த பள்ளத்தை சரி செய்தார். இதுதொடர்பான வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு 'புகார் அளிப்பதை விடுத்து நீங்களே இறங்கி பிரச்சனையை சரி செய்யுங்கள்' என அட்வைஸும் செய்துள்ளார் அந்த டெர்மினேட்டர் நடிகர்.

 

 

Next Story

அமெரிக்க அரசின் ஆவணங்களை மறைத்து வைத்த ட்ரம்ப்! 

Published on 27/08/2022 | Edited on 27/08/2022

 

Trump hide US government documents

 

அமெரிக்க அரசின் முக்கிய ஆவணங்களை நாளேடுகள் பத்திரிகைகள் மற்றும் தனிப்பட்ட கடிதங்களுக்கு இடையே ஒளித்து வைத்துள்ளதாக அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது எப்.பி.ஐ குற்றம் சாட்டியுள்ளது.

 

அதிபர் பதவியை இழந்து அதிபர் மாளிகையில் இருந்து வெளியேறும் போது அமெரிக்க அரசின் முக்கிய ஆவணங்களை ட்ரம்ப் எடுத்துச் சென்றதாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறுகிறது. அதில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ள  எப்.பி.ஐ " டிரம்பின் புளோரிடா மாளிகையில் நடத்திய ஆய்வில்  மொத்தமிருந்த15 பெட்டிகளில் 14 பெட்டிகள் கைப்பற்றப்பட்டது. அதில் அமெரிக்க அரசின் வெளியிடக்கூடாத ரகசிய ஆவணங்களை  பத்திரிகைகள், கடிதங்கள் மற்றும் நாளேடுகளுக்கு இடையே மறைத்து வைக்கப்பட்டிருந்தது" என தெரிவித்துள்ளது.  

 

14 பெட்டிகளில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் 184 ஆவணங்கள் வகைப்படுத்தப்பட்டது என்றும் 25 ஆவணங்கள் மிக ரகசியத் தன்மை கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.