பிரபல ஹாலிவுட் நடிகரான அர்னால்ட், நடிப்பு மட்டுமின்றி அரசியலிலும் தீவிர ஈடுபாடு கொண்டவர். அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் குடியரசு கட்சியை சேர்ந்தவரான இவர், 2003 முதல் 2011ஆம் ஆண்டுவரை கலிபோர்னியா மாகாணத்தின் கவர்னராக இருந்துள்ளார்.

Advertisment

trump

ட்ரம்பும், அர்னால்ட்டும் ஒரே கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் இவர்கள் இருவரும் தொடக்கத்திலிருந்து கருத்தியல் ரீதியாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. குடியுரிமை உள்பட டர்ம்பின் சர்ச்சைக்குரிய திட்டங்களை அர்னால்ட் கடுமையாக விமர்சித்தார். அதே போல் டிரம்ப்பும், அர்னால்டின் கருத்துகளுக்கு பலமுறை கிண்டலாக பதிலளித்திருக்கிறார்.

Advertisment

இந்நிலையில் பிரபல அமெரிக்க இதழ் அண்மையில் அர்னால்டிடம் பேட்டி எடுத்தது. அப்போது அவரிடம், “உங்களுக்கும், டிரம்ப்புக்கும் இடையிலான பகைமையின் காரணம் என்ன? உங்கள் மீது அவர் கூறும் விமர்சனங்களுக்கு நீங்கள் என்ன பதில் கூறுகிறீர்கள்?” என்று கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த அர்னால்டு, “ட்ரம்ப் என் மீது காதல் கொண்டிருக்கிறார். அவர் என்னை போல் இருக்க விரும்புகிறார். இதுதான் உண்மை. மக்கள் அமெரிக்காவை எவ்வளவு தூக்கி வீசினாலும், மக்கள் ஜனாதிபதியை பார்த்து எவ்வளவு சிரித்தாலும் உலகெங்கிலும் உள்ள மக்கள் அமெரிக்கா வரவே விரும்புகிறார்கள். ஏனென்றால் அவர்களுக்கு நன்கு தெரியும். ஒரு மனிதர், ஒரு ஜனாதிபதியால் அமெரிக்கா மாறிவிடாது” என்று கூறினார்.

Advertisment