Advertisment

புதின் எதிர்ப்பாளருக்கு நோபல் பரிசு - கல்வியாளர்கள் பரிந்துரை!

nobel prize

Advertisment

இயற்பியல், மருத்துவம், இலக்கியம், அமைதி, வேதியல்உள்ளிட்ட துறைகளில்சிறந்த பங்களிப்பை அளிப்போருக்கு ஆண்டுதோறும் நோபல்பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இந்தப் பரிசுக்கான பரிந்துரைகளை, இதற்குமுன் நோபல்பரிசு வென்றவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் செய்யலாம். இந்தநிலையில் இந்த ஆண்டிற்கான நோபல் பரிசுக்கு329 பேர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

இந்தப் பரிந்துரை பட்டியலில்சுவீடன்நாட்டைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் க்ரெட்டாதன்பெர்க், அமெரிக்கமுன்னாள் அதிபர் டொனால்ட்ட்ரம்ப், ரஷ்யஎதிர்க்கட்சி தலைவரும், அந்த நாட்டின் அதிபர் புதினைகடுமையாக எதிர்த்து வருபவருமான அலெக்ஸி நவல்னி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ரஷ்யாவைஜனநாயகமாக்கும் அமைதியான முயற்சிகளுக்காக அந்த நாட்டுகல்வியாளர்களால் அலெக்ஸி நவல்னி பரிந்துரைக்கப்பட்டுள்ளார் என்பதுகுறிப்பிடத்தக்கது.

உலக சுகாதாரநிறுவனமும்நோபல் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஏழைநாடுகள் கரோனா தடுப்பூசியைப் பெற, உலக சுகாதாரம்நிறுவனம் எடுத்து வரும் முயற்சிகளுக்காக, அந்த நிறுவனம் நோபல்பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டிற்கான நோபல்பரிசை வெல்பவர்கள், யார் யார் என்பதுவரும் அக்டோபர் மாதம் அறிவிக்கப்படும்.

greta thunberg donald trump nobel prize
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe