அமெரிக்க அதிபர் டிரம்ப் மீதான மோசடி புகார் நிரூபிக்கப்பட்ட நிலையில், அமெரிக்க நீதிமன்றம்அவருக்கு 14 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 'டொனால்ட் ஜே டிரம்ப் பவுண்டேஷன்' எனும் அறக்கட்டளையை நடத்தி வருகிறார். கடந்த 2016 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலின் போது இந்த அறக்கட்டளையின் நிதியை முறைகேடான வகையில், தேர்தல் செலவுகளுக்கு பயன்படுத்தியதற்காக நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த விசாரணையில், டிரம்ப் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அதற்கான தண்டனையாக அவருக்கு இரண்டு மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 14 கோடி ) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் டிரம்ப் அபராதமாக செலுத்தும் பணம், அவருடன் தொடர்பில்லாத எட்டு தொண்டு நிறுவனங்களுக்கு பகிர்ந்து வழங்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.