அமெரிக்காவின் செனட் சபை மற்றும் பிரதிநிதிகள் சபை உறுப்பினர்கள் அடங்கிய நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் சபாநாயகர் நான்சி பெலோசிஸ் இடையே ஏற்பட்ட மறைமுக மோதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
வாஷிங்டனில் உள்ள கேபிட்டல் கட்டிடத்தில் இன்று நடைபெற்ற கூட்டுக்கூட்டத்தில், உரை தொடங்குவதற்கு முன் உரை நகலை சபாநாயகர் நான்சியிடம் கொடுத்த ட்ரம்ப்,அவருடன் கைகுலுக்க மறுத்தார். அதன் பின்னர் உறுப்பினர்கள் மத்தியில் பேச ஆரம்பித்த ட்ரம்ப், சுமார் ஒரு மணி நேரம் 18 நிமிடங்கள் உரையாற்றினார்.
இந்த உரையை ட்ரம்ப் முடித்தவுடன் அவருக்கும் அருகில் அமர்ந்திருந்த சபாநாயகர் நான்சி, ட்ரம்பின் உரை நகலை அவை முன்பே கிழைத்தார். இந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. இரு அவைகளின் உறுப்பினர்கள் முன்னிலையில், அதிபருக்கும், சபாநாயகருக்கு நடைபெற்றஇந்த மோதல் அமெரிக்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.