Skip to main content

டிரம்ப்- க்ரெட்டா இடையே மீண்டும் ட்விட்டர் வார்த்தைப்போர்...

Published on 13/12/2019 | Edited on 13/12/2019

உலகநாடுகள் பங்குபெற்ற ஐக்கிய நாடுகள் அவையின் 74வது பொதுக்கூட்டத்தில் டிரம்ப் உள்ளிட்ட உலக தலைவர்களை கடுமையாக விமர்சித்து இணைய உலகில் பிரபலமானவர் ஸ்வீடன் நாட்டை சேர்ந்த 16 வயது சிறுமியான க்ரெட்டா தன்பெர்க்.

 

trump and greta tweets about time person of the year

 

 

கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம், உலக வெப்பமயமாதலை தடுக்க வலியுறுத்தி ஸ்வீடன் நாடாளுமன்ற வளாகம் முன்பு தனி ஒரு ஆளாக போராட்டம் நடத்தி உலக மக்களின் கவனத்தை இவர் பெற்றார். அதன்பின்னர் ஐ.நா வில் இவரின் உரையும் உலக அளவில் பெரும் ஆதரவை பெற்றது. ஆனால் அதன்பின் க்ரெட்டாவை கிண்டல் செய்யும் விதமாக, கிரேட்டா தன்பெர்க் பேசிய வீடியோவை டிரம்ப் தனது ட்விட்டரில் பகிர்ந்து, “இந்த சிறுமி மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார். பார்ப்பதற்கு அருமையாக உள்ளது. இவருக்கு சிறப்பான எதிர்காலம் உள்ளது” என விமர்சித்து பதிவிட்டார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், கிரேட்டா தன்பெர்க், தனது  ட்விட்டர் பக்கத்தில் உள்ள சுயவிவரத்தை மாற்றினார். அதில் அவர் “நான் மகிழ்ச்சியான இளம்பெண். நல்ல எதிர்காலத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் பெண்” என குறிப்பிட்டிருந்தார். டிரம்ப் மற்றும் கிரேட்டா இடையேயான இந்த ட்விட்டர் சண்டை பலரையும் வியப்படைய வைத்தது.

இந்நிலையில், டைம்ஸ் இதழின் 2019 ஆம் ஆண்டிற்கான சிறந்த மனிதர் என்ற பட்டத்தை க்ரெட்டா தன்பெர்க் பெற்றுள்ளார். இதனை விமர்சிக்கும் வகையில், ''இது அபத்தமானது. கிரெட்டா தனது கோபத்தைக் கையாள்வது தொடர்பாக செயலாற்ற வேண்டும். பின்னர் அவர் தனது நண்பருடன் இணைந்து பழைய படம் ஒன்றைப் பார்க்க வேண்டும்'' என்று ட்ரம்ப் பதிவிட்டிருந்தார். மீண்டும் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தனது ட்விட்டர் பக்கத்தில் உள்ள சுய விவரத்தில், “இளம்பருவப் பெண் தனது கோபத்தைக் கையாள்வது குறித்துச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறாள். தற்போது தனது நண்பருடன் பழைய படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள்” என்று பதிவிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“அமெரிக்காவிற்கு கிடைத்த வெற்றி” - நீதிமன்றத் தீர்ப்பால் மகிழ்ச்சியில் டிரம்ப்

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
Trump happy with court ruling and he posted "Victory for America" ​​

குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்க அதிபராக கடந்த 2016 ஆம் ஆண்டு வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து நடந்த 2020 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடனை எதிர்த்துப் போட்டியிட்டார். அந்த தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்று அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்றார். நான்கு ஆண்டுகள் கொண்ட அமெரிக்க அதிபரின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது. இந்தத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக, ஜனநாயகக் கட்சி சார்பாக ஜோ பைடனும், குடியரசு கட்சி சார்பாக டொனால்ட் டிரம்பும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதற்கிடையே, கடந்த 2021 ஆம் ஆண்டு புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடனிடம் ஆட்சி பொறுப்பை வழங்குவதற்கு வழிவகை செய்யும் வெற்றிச் சான்றிதழ் அளிப்பு நிகழ்ச்சி நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. அப்போது அந்த நிகழ்ச்சியை நடத்த விடாமல், டிரம்ப்பின் ஆதரவாளர்கள் வெள்ளை மாளிகை முன்னால் நின்று கலவரத்தில் ஈடுபட்டனர். அவர்களை விரட்டியடிக்க போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 4 பேர் பரிதாபமாக பலியாகினர். ஒட்டுமொத்த அமெரிக்காவையும் உலுக்கிய இந்த கலவரத்தில் டொனால்ட் ட்ரம்ப்புக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. மேலும், அந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக டிரம்ப் பல்வேறு குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டுகளும் எழுந்தன.

அதனைத் தொடர்ந்து, வெள்ளை மாளிகையை விட்டு டிரம்ப் வெளியேறிய பின்பு, அமெரிக்கா அரசின் ரகசிய ஆவணங்களை அவர் எடுத்துச் சென்றதாகக் குற்றச்சாட்டும் எழுந்தது. இது தொடர்பாக முன்னாள் அதிபர் டிரம்ப் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் கொலம்பியா மாவட்ட நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகின்றது.

இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் உள்ள நீதிமன்றங்களில் அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. அந்த வகையில், கொலராடோ மாகாணத்தின் நீதிமன்றத்திலும் நாடாளுமன்ற கலவரம் தொடர்பாக வழக்கு தொடரப்பட்டு, விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் கொலராடோ நீதிமன்றம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 19 ஆம் தேதி பரபரப்பு தீர்ப்பு ஒன்றை அளித்தது. அதில், இந்த ஆண்டு (2024) நடைபெறும் அதிபர் தேர்தலில் போட்டியிட டிரம்புக்கு தகுதி இல்லை என்ற பரபரப்பு தீர்ப்பை வழங்கியது. மேலும், குடியரசு கட்சியின் வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலின் வாக்குச் சீட்டில் டிரம்ப்பின் பெயர் இடம் பெறக்கூடாது என்றும், அவ்வாறு இடம்பெற்றால் அவருக்கு அளிக்கும் வாக்கு செல்லாது என்றும் தெரிவித்தது. 

இதனையடுத்து, இந்தத் தீர்ப்பை எதிர்த்து டொனால்ட் டிரம்ப், அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் மீதான விசாரணை நேற்று (05-03-24) அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடத் தடையில்லை எனக் கூறி கொலராடோ நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தனர். அமெரிக்க உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து டொனால்ட் டிரம்ப், சமூக வலைத்தளத்தில், ‘அமெரிக்காவிற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி’ என்று குறிப்பிட்டுள்ளார். 

Next Story

“இதுபோன்ற சம்பவங்கள் அமெரிக்காவில் இனி நடக்கக் கூடாது” - அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்

Published on 04/08/2023 | Edited on 05/08/2023

 

"Such incidents should not happen again in America" ​​- Former US President Trump

 

குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்ட் டிரம்ப், அமெரிக்க அதிபராகக் கடந்த 2016 ஆம் ஆண்டு வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து நடந்த 2020 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடனை எதிர்த்துப் போட்டியிட்டார். அந்த தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்று அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்றார்.

 

 

இதையடுத்து, புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடனிடம் ஆட்சிப் பொறுப்பை வழங்குவதற்கு வழிவகை செய்யும் வெற்றிச் சான்றிதழ் அளிப்பு நிகழ்ச்சி நாடாளுமன்றத்தில் 2021 ஆம் ஆண்டு நடைபெற்றது. அப்போது அந்த நிகழ்ச்சியை நடத்த விடாமல், டிரம்ப்பின் ஆதரவாளர்கள் வெள்ளை மாளிகை முன்னால் நின்று கலவரத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, இந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக டிரம்ப் பல்வேறு குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

 

அதனைத் தொடர்ந்து, வெள்ளை மாளிகையை விட்டு டிரம்ப் வெளியேறிய பின்பு, அமெரிக்கா அரசின் ரகசிய ஆவணங்களை அவர் எடுத்துச் சென்றதாகக் குற்றச்சாட்டும் எழுந்தது. இது தொடர்பாக முன்னாள் அதிபர் டிரம்ப் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் கொலம்பியா மாவட்ட நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகின்றது.

 

இது குறித்துப் பேசிய அரசுத் தரப்பு சிறப்பு வழக்கறிஞர் ஜான் ஸ்மித், “அமெரிக்க அதிபர் தேர்தலில் தனது தோல்வியை ஏற்க மறுத்து, தேர்தல் முடிவுகளை மாற்றியமைப்பதற்கு டிரம்ப் முயற்சி செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. டிரம்ப் மீது சுமத்தப்பட்ட இந்த குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் உள்ளதாக கொலம்பியா மாவட்ட நீதிமன்ற நீதிபதி உறுதி செய்துள்ளார். மேலும், அவர் கூறிய அந்த தீர்ப்பில், அமெரிக்காவின் அடிப்படை உரிமைகளைப் பறித்து சதி செய்தது உள்பட 4 குற்றச்சாட்டுகளை நீதிபதி உறுதி செய்துள்ளார்” என்று தெரிவித்தார். இதனிடையே, இந்த வழக்கில் டிரம்ப்புக்கு எதிரான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, வாஷிங்டனிலுள்ள கொலம்பியா மாவட்ட நீதிமன்றத்தில் டிரம்ப் இன்று நேரில் ஆஜராகவிருப்பதாகக் கூறப்பட்டது.

 

இந்நிலையில், நீதிமன்றத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜரான ட்ரம்ப், ‘தான் இந்த வழக்கில் குற்றமற்றவர்’ எனத் தெரிவித்தார். இதையடுத்து, வருகிற 28 ஆம் தேதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. விசாரணை முடிந்து செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், “இது அமெரிக்காவுக்கு மிகவும் சோகமான நாள். மேலும் நான் அரசியல் எதிரிகளால் துன்புறுத்தப்படுகிறேன். இதுபோன்ற சம்பவங்கள் அமெரிக்காவில் இனி நடக்கக் கூடாது.” எனத் தெரிவித்தார்.