hgfhhg

அமெரிக்கா மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்புவதற்காக சுமார் 40,000 கோடி (இந்திய ரூபாயில்) கேட்டு டிரம்ப் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார். அனால் இந்த தொகையை தருவதற்கு எதிர்க்கட்சிகள் ஒப்புக்கொள்ளாததால், அங்கு ஷட்டவுன் நிலையை பிரகடனப்படுத்தினார் டிரம்ப்.

Advertisment

இதன் காரணமாக அமெரிக்க அரசாங்கத்திற்கு இதுவரை 45,000 கோடி(இந்திய ரூபாயில்) இழப்பு ஏற்பட்டுள்ளதாக கடந்த வாரம் அறிவிப்பு வெளியாகியது. இந்நிலையில் இதுபற்றி கூறியுள்ள டிரம்ப், மக்கள் எனது பேச்சை நன்கு உற்று கவனியுங்கள், அமெரிக்க கட்சிகள் உங்களின் விருப்பத்திற்கு எதிராக செயல்படுகின்றன. இப்படியே நிலைமை நீடித்தால்நான் ஏற்கனவே சொன்னது போல் ஒரே ஒரு வழி தான் உள்ளது,என கூறியுள்ளார்.

ஏற்கனவே இந்த விஷயம் பற்றி பேசிய டிரம்ப் இப்படியே நிலைமை நீடித்தால் அவசரகால நிலையை அமல்படுத்த நேரிடும் என கோரியிருந்தார். எனவே தற்போது அவர் இப்படி கூறியிருப்பது அவசரகால நிலையை அமல்படுத்துவதற்கான திட்டத்தை பற்றி அவர் மறைமுகமாக கூறியிருப்பதாகவே பார்க்கப்படுகிறது.

Advertisment