ஃபேஸ்புக், ட்விட்டர், கூகுள் ஆகிய நிறுவனங்கள் மீது விரைவில் வழக்கு தொடர போவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஒரு பேட்டியில் கூறியுள்ள டிரம்ப், "ஃபேஸ்புக், ட்விட்டர், கூகுள் ஆகிய மூன்று நிறுவனங்களும் ஜனநாயகக் கட்சியைச் சார்ந்த நிறுவனங்கள். இதனால்தான் அவை ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவாகவும் குடியரசுக் கட்சிக்கு எதிராகவும் செய்திகளை பரப்புகின்றன. இதற்காகத்தான் அந்த நிறுவனங்கள் மீது விரைவில் வழக்கு தொடர உள்ளேன். குறிப்பாக ட்விட்டரை எடுத்துக்கொள்ளுங்கள். எனக்கு ட்விட்டரில் எக்கச்சக்க ஃபாலோயர்கள் உள்ளன. ஆனால், மேலும் பலரையும் ட்விட்டரில் என்னை பின் தொடரவிடாமல் வேண்டுமென்றே செய்கின்றனர்" என கூறினார்.