Advertisment

"சீனாவின் இயலாமைதான் இதற்கெல்லாம் காரணம்" - ட்ரம்ப் ஆவேசம்...

trump about china and corona virus

சீனாவின் இயலாமை காரணமாகவே உலகம் முழுவதும் கரோனா படுகொலைகளை நிகழ்த்தி வருகிறது என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.அமெரிக்காவில் சுமார் 15 லட்சத்திற்கும் அதிகமானோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 93,697 பேர் இந்த வைரஸ் தொற்றால் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் கரோனா பரவலுக்குச் சீனாதான் காரணம் எனத் தொடர்ச்சியாக விமர்சித்து வருகிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.

Advertisment

அந்த வகையில் அண்மையில் இதுகுறித்து சீனாவைக் கடுமையாக விமர்சித்துள்ள ட்ரம்ப், "கரோனாவை கட்டுப்படுத்த முடியாத சீனாவின் இயலாமையால் உலகம் முழுவதும் பெரும் படுகொலைகள் நிகழ்ந்து வருகின்றன. அமெரிக்கா மற்றும் ஐரோப்பா மீதான தவறான தகவல் மற்றும் பிரச்சார தாக்குதலுக்குப் பின்னால் சீன அதிபர் ஜி ஜின்பிங் இருக்கிறார்" எனத் தெரிவித்துள்ளார்.

Advertisment

corona virus trump
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe