ADVERTISEMENT

"உலக சுகாதார அமைப்பின் மீதான நடவடிக்கை" - ட்ரம்ப் புதிய அறிவிப்பு...

04:59 PM May 15, 2020 | kirubahar@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

கரோனா விவகாரத்தில் உலக சுகாதார அமைப்பின் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.


உலக சுகாதார அமைப்பு சீனாவுக்கு ஆதரவாக செயல்படுவதாக ட்ரம்ப் தொடர்ந்து குற்றம்சாட்டி வைத்த நிலையில், அண்மையில் அந்த அமைப்புக்கு அமெரிக்கா வழங்கிவந்த நிதியுதவியை நிறுத்துவதாக அவர் அறிவித்தார். மேலும், கரோனா விவகாரத்தில் தொடர்ந்து சீனாவுக்கு ஆதரவாக செயல்படும் உலக சுகாதார அமைப்பின் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அறிவித்திருந்தார். ஆனால் ட்ரம்ப்பின் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து மறுத்த உலக சுகாதார அமைப்பின் தலைவர், "உலகம் முழுவதும் உள்ள அரசியல் கட்சிகளை கேட்டுக்கொள்வதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். அதிகமான சவப்பெட்டிகளை உங்கள் தோளில் சுமக்க விரும்பவில்லை என்றால், கரோனா விவகாரத்தில் அரசியல் செய்யாதீர்கள்" என காட்டமாக தெரிவித்தார். இந்நிலையில், இன்று பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய ட்ரம்ப், "உலக சுகாதார அமைப்பின் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் விரைவில் அறிவிக்கப்படும். அதிகபட்சமாக அடுத்த வாரத்தில் அறிவிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT