Skip to main content

வாட்ஸ் அப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு... பயனர்கள் அவதி  

Published on 19/01/2020 | Edited on 19/01/2020

வாட்ஸ்அப் எனப்படும் சமூக வலைதளத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

 

 Trouble sending photo video in Whatsapp...!

 

உலகின் பல்வேறு நாடுகளில் வாட்சப்பில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை அனுப்புவதற்கான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் சிரமம் அடைந்துள்ளனர்.

#whatsappdown (வாட்ஸ்அப்டவுன்) என்ற ஹேஷ் டாக் மூன்றாவது இடத்தில் டுவிட்டரில் ட்ரெண்ட் ஆகிவருகிறது. திடீரென ஏற்பட்ட இந்த தொழில்நுட்ப கோளாறு குறித்து வாட்ஸ்அப் நிறுவனம் தரப்பில் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தலிபான்களின் வாட்ஸ்அப்  கணக்குகள் முடக்கப்படும்' - ஃபேஸ்புக் அறிவிப்பு!

Published on 18/08/2021 | Edited on 18/08/2021

 

TA

 

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது, ஆப்கான் மக்களை மட்டுமல்லாமல் உலக நாடுகளையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. தலிபான்களுக்குப் பயந்து ஆப்கானிஸ்தான் மக்கள் தங்கள் நாட்டைவிட்டு வெளியேறிவருகின்றனர். பல்வேறு நாடுகளும் ஆப்கானில் வசிக்கும் தங்கள் நாட்டு மக்களைப் பாதுகாப்பாக மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகின்றன.

 

இந்நிலையில் நேற்று (17.08.2021) ஃபேஸ்புக் நிறுவனம், தங்களது தளத்தில் இருந்து தலிபான்களின் கணக்குகள் முடக்கப்படும் என்றும், அவர்களை ஆதரித்து வெளியிடப்படும் பதிவுகள் நீக்கப்படும் என்றும் அறிவித்தது. இதுதொடர்பாக ஃபேஸ்புக் நிறுவன செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "அமெரிக்க சட்டத்தின் கீழ் தலிபான்கள் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆபத்தான கொள்கைகளைக் கொண்டவர்கள் என்பதால் எங்களது சேவைகளிலிருந்து தடை செய்யப்பட்டுள்ளனர். இதன்படி தலிபான்களால் அல்லது தலிபான்கள் சார்பாக பராமரிக்கப்படும் கணக்குகளை அகற்றுவோம். மேலும், தலிபான்களைப் புகழ்வது, ஆதரிப்பது மற்றும் பிரதிநிதித்துவப்படுத்துவது உள்ளிட்டவற்றையும் தடை செய்வோம்" எனக் கூறினார்.

 

அதன்படி தலிபான்களின் ஃபேஸ்புக் முடக்கப்பட்டது. இந்நிலையில், தலிபான்கள் மற்றும் அவரது ஆதரவாளர்களின் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கப்படும் என ஃபேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது. தலிபான்கள் பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா அங்கீகரித்துள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. 

 

 

Next Story

வாட்ஸ் அப்பில் இனி கரோனா சான்றிதழ்... தடுப்பூசி செலுத்திக்கொள்ள தயங்குவோர் சதவீதம்! 

Published on 08/08/2021 | Edited on 08/08/2021

 

Corona certificate on WhatsApp ... Percentage of people reluctant to get vaccinated!

 

கரோனா இரண்டாம் அலை காரணமாக தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், பெரும்பாலான மக்கள் கரோனா தடுப்பு செலுத்தி கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வதில் 38.1 சதவீதம் பேருக்கு தயக்கம் இருப்பதாக மத்திய மருத்துவத்துறை அறிவித்துள்ளது. 19.7 சதவீதம் ஆண்களுக்கும், 18.4 சதவீத பெண்களுக்கும் கரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்வதில் தயக்கம் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

அதேபோல் தடுப்பூசி செலுத்தி கொண்ட உடனேயே வாட்ஸப்பில் சான்றிதழ் பெறும் வசதியை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது. 90131 51515 என்ற வாட்ஸ்அப் எண்ணில் 'கோவிட் செர்டிஃபிகேட்' என  அனுப்பப்ப வேண்டும் என  மத்திய அமைச்சர் மன்சுக் தெரிவித்துள்ளார். சம்பந்தப்பட்ட நபர் ஓடிபியினை பதிவு செய்தவுடன் தகுதிச் சான்றிதழைப் பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.