Skip to main content

ட்ரம்ப் - புதின் சந்திப்பு !! முதலில் அடிபணிவது யார் ??!!

Published on 28/06/2018 | Edited on 28/06/2018

 

trump

 

 

 

அண்மையில் வரலாற்று சந்திப்பாக பார்க்கப்பட்ட அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வடக்கோரிய அதிபர் கிம் ஜாங் உன் உடனான சந்திப்பு அண்மையில் சிங்கப்பூரில் நடந்து முடிந்தது. இதை தொடர்ந்து பிரஸல்ஸில் நடைபெறவுள்ள நேடா பேச்சுவார்த்தைக்கு பிறகு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ரஷ்ய அதிபர் புதினுடனான சந்திப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சந்திப்பும் உலக நாடுகளால் ஒரு முக்கிய சந்திப்பாகவே பார்க்கப்படுகிறது.

 

இந்த சந்திப்பு பின்லாந்து தலைநகர் எல்சின்கியில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேச்சு வார்த்தையில் சிரியா போர் மற்றும் உக்கிரைன் குறித்த நிலவரங்கள் பற்றி அலசுவதற்கான பேச்சுவார்தையாகவும், சந்திப்பாகவும் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

 

டிரம்ப்-புதின் சந்திப்பானது அண்மையில் அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர்  ஜான் போல்டன் அதிபர் புதின் சந்திப்பில் உறுதிசெய்யப்பட்டு தற்போது சந்திப்பிற்கான தகவல்கள்  வெளியாகியுள்ளது. கடந்த புதன் அன்று  ரஷ்யா சார்பில் இந்த சந்திப்பு பற்றிய அறிவிப்பு ரஷ்ய வெளியுறவு கொள்கை அதிகாரி யூரி உஷாகோவால் உறுதிப்படுத்தப்பட்டது. அதேபோல் இந்த சந்திப்பு இருநாடுகளுக்கு அருகிலுள்ள மூன்றாவது நாட்டில் நடைபெறலாம் என ஏற்கனவே சொல்லப்பட்டிருந்தது.

 

ரஷ்ய அதிபர் புதின், ஏற்கனவே அமெரிக்கா- ரஷ்யா இடையே நல்லுறவு இல்லை என்பதை ஒப்புக்கொண்டார் என்றாலும் இந்த சந்திப்பு இருநாட்டுக்கும் இடையேயான நல்லுறவை ஏற்படுத்த வழிவகுக்கும். அதேபோல் என்றுமே ரஷ்யா அமெரிக்காவுடன் மோதல் போக்கை கடைபிடித்ததில்லை ஆனால் அமெரிக்காவில் ஏற்படும் உள்நாட்டு மோதல் போக்கே அதற்கு காரணம் எனவும் கூறியுள்ளார். 

சார்ந்த செய்திகள்

Next Story

அமெரிக்க அரசின் ஆவணங்களை மறைத்து வைத்த ட்ரம்ப்! 

Published on 27/08/2022 | Edited on 27/08/2022

 

Trump hide US government documents

 

அமெரிக்க அரசின் முக்கிய ஆவணங்களை நாளேடுகள் பத்திரிகைகள் மற்றும் தனிப்பட்ட கடிதங்களுக்கு இடையே ஒளித்து வைத்துள்ளதாக அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது எப்.பி.ஐ குற்றம் சாட்டியுள்ளது.

 

அதிபர் பதவியை இழந்து அதிபர் மாளிகையில் இருந்து வெளியேறும் போது அமெரிக்க அரசின் முக்கிய ஆவணங்களை ட்ரம்ப் எடுத்துச் சென்றதாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறுகிறது. அதில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ள  எப்.பி.ஐ " டிரம்பின் புளோரிடா மாளிகையில் நடத்திய ஆய்வில்  மொத்தமிருந்த15 பெட்டிகளில் 14 பெட்டிகள் கைப்பற்றப்பட்டது. அதில் அமெரிக்க அரசின் வெளியிடக்கூடாத ரகசிய ஆவணங்களை  பத்திரிகைகள், கடிதங்கள் மற்றும் நாளேடுகளுக்கு இடையே மறைத்து வைக்கப்பட்டிருந்தது" என தெரிவித்துள்ளது.  

 

14 பெட்டிகளில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் 184 ஆவணங்கள் வகைப்படுத்தப்பட்டது என்றும் 25 ஆவணங்கள் மிக ரகசியத் தன்மை கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 


 

 

 

Next Story

ரகசிய ஆவணங்களை கையோடு தூக்கிச் சென்ற ட்ரம்ப்- எஃப்.பி.ஐ அதிரடி!

Published on 13/08/2022 | Edited on 13/08/2022

 

Trump who carried the secret documents with his hand - FBI action!

 

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ட்ரம்ப் பங்களாவில் எஃப்.பி.ஐ ரெய்டு நடத்தியதாக அண்மையில் தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில் இந்த சோதனையில் மிக முக்கிய ரகசிய ஆவணங்களை எஃப்.பி.ஐ கைப்பற்றி சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

கடந்த 9ஆம் தேதி தெற்கு ப்ளோரிடாவில் உள்ள தனது கடற்கரை பங்களாவில் எஃப்.பி.ஐ சோதனை நடத்தியது என ட்ரம்ப் கூறியிருந்தார். இதன்பின் வெளியான தகவல்கள் அமெரிக்க அரசியல் வட்டத்தில் அதிர்வை கிளம்பின. முன்னாள் அதிபர் ட்ரம்ப் அமெரிக்க உளவுத்துறை சட்டத்தை மீறும் வகையில் பதவி விலகிய பிறகு முக்கிய ஆவணங்களை அரசிடம் ஒப்படைக்காமல் கையோடு எடுத்து சென்றுவிட்டதாகப் புகார்கள் கிளம்பிய நிலையிலேயே இந்த சோதனையானது நடைபெற்றது. இந்த புகாரின் அடிப்படையில் நீதிமன்ற அனுமதியின்படி எஃப்.பி.ஐ ட்ரம்பிற்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினர். 

 

இந்நிலையில் கடந்த வாரம் ப்ளோரிடாவில் நடந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் விவரங்களை நீதிமன்றத்தில் எஃப்.பி.ஐ தெரிவித்தது. கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் அமெரிக்காவின் பாதுகாப்பு தொடர்பான மிக முக்கிய ரகசிய ஆவணங்களும் உள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இந்த சோதனை குறித்து ட்ரம்ப் அவருடைய 'ட்ரூத்' எனும் சமூகவலைத்தளத்தில் 'தன்னிடம் கேட்டிருந்தால் ஆவணங்களை ஒப்படைத்திருப்பேன்; இதற்காக வீட்டின் பூட்டை உடைத்து அரசியல் செய்வது கண்டிக்கத்தக்கது' என்று கூறியுள்ளார்.