சீனாவில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு வரலாறு காணாத வகையில் பனிபொழிவு காணப்படுகின்றது. இதன் காரணமாக சாலையில் வாகன விபத்துக்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றது. அங்குள்ள அருவிகள், ஆறுகள் அனைத்தும் உறைந்து காணப்படுகின்றது. இந்நிலையில் சீனாவின் ஜிலின் மாகாணத்தில் ஆற்று பாலத்தின் மீது சென்று கொண்டிருந்த ரயில் ஒன்று எதிர்பாராத விதமாக தடம் புரண்டு ஆற்றில் விழுந்தது.

Advertisment

இந்த விபத்தில் ரயில் பெட்டியில் பயணம் செய்த 35 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், 4 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர். விபத்துக்கு காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட வருகிறார்கள். பனிப்பொழிவு விபத்து காரணமா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறார்கள்.