Skip to main content

நிலவில் பயணிக்க டொயோட்டா நிறுவனம் வாகனம் தயாரிப்பு...!

Published on 14/03/2019 | Edited on 14/03/2019

ஜப்பான் விண்வெளி ஆய்வு மையமான (JAXA) மற்றும் ஜப்பான் கார் தாயரிப்பு நிறுவனமான  டொயோட்டா இரண்டும்  சேர்ந்து நிலவில் பயணிக்கும் வகையில் புதிய ரோவர் வகை வாகனத்தை வடிவமைப்பதற்கு திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக JAXA  மற்றும் டொயோடா ஆகிய நிறுவனங்கள் இடையே ஒப்பந்தமும் கையெழுத்தாகியுள்ளது. 

 

jaxa

 

இந்த வாகனம் 2 பேர் பயணிக்கும் வகையில் இருக்குமெனவும், அதேசமயம் அவசர காலங்களில் 4 பேர் வரை பயணிக்கும் வகையிலும் இந்த வாகனம் வடிவம் இருக்குமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

இந்த வாகனம், 6 மீட்டர் நீளம், 5.2 மீட்டர் அகலம் மற்றும் 3.8 மீட்டர் உயரமும் கொண்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

முழுக்க முழுக்க சூரிய ஒளியால் இயங்கும் வகையில் இந்த வாகனம் இருப்பதாகவும், இந்த வாகனம் தொடர்ந்து 10 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் வரை பயணிக்கக்கூடியவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சென்னையில் பெண் தொழிலதிபர் தற்கொலை...போலீஸ் விசாரனை.(படங்கள்)

Published on 12/09/2019 | Edited on 12/09/2019

சென்னை கோயம்பேட்டிலுள்ள லான்சன் டயோட்டா கார் கம்பெனியின் இணை நிர்வாக இயக்குனராக இருப்பவர் ரீட்டா லங்காலிங்கம். இவருக்கு வயது ஐம்பது.
 

lanka lingam

 

 

இன்று நுங்கம்பாக்கத்திலுள்ள கோத்தாரி சாலையில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவர் ஏன் தற்கொலை செய்துகொண்டார் என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 


 

Next Story

ஹோண்டா, டொயோட்டா கார்களின் விலையைவிட குறைவு...! மாருதி சுசூகியின் புதிய எர்டிகா...

Published on 22/11/2018 | Edited on 22/11/2018

இந்திய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசூகி, எர்டிகா அடுத்த தலைமுறை காரை புதன்கிழமை அறிமுகம் செய்துள்ளது. இதன் ஆரம்ப விலை ரூ. 7.44 இலட்சம் என்றும் அதிகபட்ச்ச விலை ரூ. 10.90 இலட்சம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் கார்கள்  பெட்ரோல் மற்றும் டீசல் இரண்டிலும் விற்பனைக்குவந்துள்ளது. 

 

ee

 

 

எம்பிவி எனும் பன்முக பயன்பாட்டு கார்கள் வகையில், ஹோண்டா பிஆர்-வி, டாடா ஹெக்ஸா மற்றும் டொயோட்டா இன்னோவா கார்களின் விலையைவிட குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் வந்த எர்டிகா மாடாலுக்கும் இப்போது வந்திருக்கும் மாடாலுக்கும் பெட்ரோலில் இயங்கக்கூடிய கார்களின் விலை ரூ. 65,000 முதல் 71,000 வரை அதிகம் என்றும் டீசலில் இயங்கக்கூடிய கார்களின் விலை ரூ. 5,000 முதல் 20,000 வரை அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

மாருதி சுசூகியின் எர்டிகா மாடல் கார் 2012-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அறிமுகமானது. அதில் இருந்து இதுவரை 4,20,000 கார்கள் விற்பனையாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.