22 லட்ச ரூபாய்க்கு விற்கப்பட்ட திரைப்பட போஸ்டர்...

பிரபல ஹாலிவுட் அனிமேஷன் திரைப்படமான ‘டாய் ஸ்டோரி’ திரைப்படத்தின் போஸ்டர் ஒன்று இந்திய மதிப்பில் சுமார் 22 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.

toy story movie poster auctioned for 22 lakh rupees

1995 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தின் முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. அந்த படத்தின் போஸ்டர் தான் தற்போது இவ்வளவு தொகை கொடுத்து வாங்கப்பட்டுள்ளது. இதற்கான முக்கிய காரணம் இந்த போஸ்டரில் ஆப்பிள் நிறுவனத்தின் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸின் கையெழுத்து இடம்பெற்றிருப்பதே.

இந்த படத்தை வெளியிட்ட டிஸ்னி படநிறுவனத்தின் இயக்குனர்கள் குழு ஊறுப்பினராக ஸ்டீவ் ஜாப்ஸ் இருந்த காலத்தில் இந்த படம் வெளியானது. எனவே அப்போது அவர் இந்த படத்தின் போஸ்டரில் கையெழுத்திட்டுள்ளனர். அந்த போஸ்டரை தற்போது லாஸ் ஏஞ்சல்ஸ் நகரை சேர்ந்த நிறுவனம் ஒன்று ஏலத்தில் விட்டது. இதன் ஆரம்ப விலை 6000 டாலர்கள் என நிர்ணயிக்கப்பட்ட நிலையில், 31,250 அமெரிக்க டாலர்களுக்கு (சுமார் 22 லட்சம் ரூபாய்) ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.

America APPLE COMPANY auction
இதையும் படியுங்கள்
Subscribe