Advertisment

“அம்புட்டும் ஒயினாம்...” - ஒயின் வெள்ளத்தில் சிக்கிய ஊர்

A town caught in a flood of wine

மழைக் காலங்களில் நீர் வடிகால் இல்லாத பகுதிகளில் வெள்ளம் அடித்துக்கொண்டு செல்வதையும் அதில் சிக்கிக்கொண்ட மக்களை மீட்பதையும் பார்த்திருப்போம் அல்லது கேள்விப்பட்டிருப்போம். ஆனால் ஒயின் வெள்ளம் கேள்விப்பட்டதுண்டா?ஆமாம் ஒரு ஊரையே சுற்றி வளைத்துத்திகைக்க வைத்துள்ளது இந்த திடீர் ஒயின் வெள்ளம்.

Advertisment

போர்ச்சுக்கல் நாட்டின் அனாடியாவில், டெஸ்டிலேரியா லெவிரா எனும் ஒயின் ஆலையில் இரண்டு டாங்குகள் திடீரென வெடித்துச் சிதறின. இதன் விளைவாக, ஒயின் கசிவு ஏற்பட்டு வெளியேறத் துவங்கியது. ஆலையின் எல்லைக்கு அப்பால் தெறித்து, நகரின் பல தெருக்களில் ஒயின் வெள்ளம் போல் ஓடியது. இந்த சம்பவம்செப்டம்பர் 10ம் தேதி நடந்தது. எதனால் இந்த உடைப்பு ஏற்பட்டது என்பது இன்னும் கண்டறியப்படவில்லை. இதில் சுமார் 2.2 மில்லியன் லிட்டர் ஒயின் கசிந்துள்ளது. இதனை நபர் ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட்ட நிலையில், அந்த ஒயின் வெள்ளக் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Advertisment

village flood wine
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe