Advertisment

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஜோதி ஓட்டம்... பிரதமர் தொடங்கி வைப்பு!

Advertisment

டெல்லியில் இந்திரா காந்தி விளையாட்டு அரங்கத்தில் பிரதமர் மோடியின் தலைமையில் 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஜோதி ஓட்டம் தொடக்க விழா நடைபெற்று வருகிறது. இந்நிகழ்வில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர். தமிழகத்தின் சார்பாக தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன், கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

இந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதியானது 40 நாட்களுக்குள் 75 நகரங்களுக்கு எடுத்துச் செல்லப்பட உள்ளது. அதிலும் மிகவும் குறிப்பிடத்தகுந்த அம்சமாக தமிழ்நாட்டில் மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள்நடைபெற இருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. கலை நிகழ்ச்சிகளுக்குபிறகு44 ஆவது செஸ் ஒலிம்பியாட்போட்டிக்கான வரலாற்றுச் சிறப்புமிக்க ஜோதி ஓட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

Chess Delhi modi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe