உலகளவில்கரோனாபாதிப்பினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17ஆயிரத்தை தொட்டுள்ளது. உலகளவில் 17,138 எனதற்போதுஇறப்பு எண்ணிக்கையானது அதிகரித்துள்ளது.அதேபோல்கரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டடோர்எண்ணிக்கை 3,91947 எனவும், குணமடைந்தவர்கள்எண்ணிக்கை 1,026843எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 Tokyo Olympic Games adjourned for one year

Advertisment

இந்நிலையில் காரோனாவின் தாக்கம் தற்போது உலக அளவில் அதிகரித்துள்ளதால் டோக்கியோவில் நடைபெறவிருந்த ஒலிம்பிக் போட்டிகள் 2021 ஆம் ஆண்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக டோக்கியோஒலிம்பிக் போட்டிகள் குறிப்பிட்ட காலத்தில் நடைபெறுமா என்ற சந்தேகம்எழுந்து வந்த நிலையில், தற்போது டோக்கியோவில் நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டிகளை ஒத்திவைப்பதுஎன்ற ஜப்பானின் பரிந்துரையை சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில்ஏற்றுக்கொண்டதை அடுத்துதற்போது ஓராண்டுக்கு ஒலிம்பிக் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.