ரகத

Advertisment

கரோனா 2ஆம் அலையின் தாக்கம் பெரிய அளவில் இருந்த நிலையில், கடந்த சில வாரங்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்துவருகிறது. இந்நிலையில் இன்று (06.07.2021) காலை நிலவரப்படி, உலகளவில் 18.49 கோடி பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 16.92 கோடி பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 லட்சமாக இருக்கிறது. கரோனா இரண்டாம் அலையில் இந்தியாவில் தினசரி பாதிப்பு அதிகமாக இருந்த நிலையில், தற்போது பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைந்துவருகிறது. இந்தியாவில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 3.06 கோடியைக் கடந்துள்ளது. மேலும் அமெரிக்கா, பிரேசிலை அடுத்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் 4 லட்சத்தைக் கடந்துள்ளது.