Advertisment

ரூ. 140 கோடிக்கு ஏலம் விடப்பட்ட திப்பு சுல்தானின் வாள்

tipu sultan sword auction 140 crores in london 

Advertisment

திப்பு சுல்தான் 1750 ஆம் ஆண்டு நவம்பர் 20 ஆம் தேதி கர்நாடக மாநிலத்தில் உள்ள தேவனஹள்ளி என்ற இடத்தில் பிறந்தார். இவரின்தந்தை ஹைதர் அலி, தாயார்பாக்ர்-உன்-நிசா. திப்பு சுல்தான் 1782 இல் தன்னுடைய தந்தையின் மரணத்திற்குப் பிறகு தன்னுடைய 32வது வயதில் சுல்தானாக அரியணை ஏறினார். அதன் பின்பு ஆங்கிலேயர்களை எதிர்த்து தொடர்ந்து போர் புரிந்தார் திப்பு சுல்தான். 1799 ஆம் ஆண்டு 4வது மைசூர் போரில் ஆங்கிலேயப்படைகளால் தோற்கடிக்கப்பட்டு மரணமடைந்தார். மேலும் இவர் மைசூரின் புலி எனவும்அழைக்கப்பட்டவர்.

இந்நிலையில் திப்பு சுல்தான் பயன்படுத்தி வந்த வாள் இங்கிலாந்தில் உள்ள லண்டன் பான்ஹாம்ஸ் ஏல நிறுவனத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று ஏலத்திற்கு வந்தது. அப்போது இந்த வாளை ஏலத்தில் எடுக்க இருவரிடையே கடும் போட்டி நிலவி உள்ளது. இந்த வாளானது ஏலத்தின் போது நிர்ணயிக்கப்பட்ட விலையை விட இது 7 மடங்கு அதிகமாக விலை போனது. இந்த வாள் 14 மில்லியன் பவுண்டுக்குஅதாவது இந்திய மதிப்பில் சுமார் 140 கோடிக்கு ஏலம் விடப்பட்டது.

திப்பு சுல்தான் 4 ஆம் மைசூர் போரில் கொல்லப்பட்ட பிறகு இந்த வாள் இங்கிலாந்தின் மேஜர் ஜெனரல் டேவிட் பயர்டுக்கு அவரது வீரத்துக்காக வழங்கப்பட்டது எனச் சொல்லப்படுகிறது. திப்பு சுல்தானின்வாள் ஏலம் விடப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பேசு பொருளாகி வருகிறது.

auction England king london
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe