Advertisment

ட்ரம்ப் மீது சீன நிறுவனம் வழக்கு?

tiktok faild case against US president trump

கடந்த மாதம் இந்திய அரசு சீன நிறுவனமான ’பைட் டான்ஸ்’ எனும் நிறுவனத்தின் தயாரிப்புகளில் ஒன்றான டிக் டாக் செயலியை தடை செய்தது. அதேபோல் சமீபத்தில் அமெரிக்க அரசும் டிக் டாக் செயலிக்கான தடையை அறிவித்தது.

Advertisment

இந்த நிலையில் தற்போது டிக் டாக் செயலி நிறுவனத்தின் தலைமை நிறுவனமான பைட் டான்ஸ், “அசாதரணமான மற்றும் மிகப்பெரிய அச்சுறுத்தல்களை ஏற்படுத்தியதாக எங்கள் நிறுவனத்தின் மீது எந்த வகையான ஆதாரமும் இன்றி அமெரிக்க அரசு தடை விதித்துள்ளது. மேலும் சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டத்தையும் தவறாக பயன்படுத்தியுள்ளது. இதன் தொடர்பாக எங்கள் நிறுவனம் வழக்கு தொடுத்துள்ளது” என்று தெரிவித்துள்ளது.இந்த வழக்கில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அதிகாரிகள் பிரதிவாதிகளாக சேர்க்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

Advertisment

TikTok America china donald trump
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe