கடந்த மாதம் இந்திய அரசு சீன நிறுவனமான ’பைட் டான்ஸ்’ எனும் நிறுவனத்தின் தயாரிப்புகளில் ஒன்றான டிக் டாக் செயலியை தடை செய்தது. அதேபோல் சமீபத்தில் அமெரிக்க அரசும் டிக் டாக் செயலிக்கான தடையை அறிவித்தது.
இந்த நிலையில் தற்போது டிக் டாக் செயலி நிறுவனத்தின் தலைமை நிறுவனமான பைட் டான்ஸ், “அசாதரணமான மற்றும் மிகப்பெரிய அச்சுறுத்தல்களை ஏற்படுத்தியதாக எங்கள் நிறுவனத்தின் மீது எந்த வகையான ஆதாரமும் இன்றி அமெரிக்க அரசு தடை விதித்துள்ளது. மேலும் சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டத்தையும் தவறாக பயன்படுத்தியுள்ளது. இதன் தொடர்பாக எங்கள் நிறுவனம் வழக்கு தொடுத்துள்ளது” என்று தெரிவித்துள்ளது.