Advertisment

இந்தியாவில் மீண்டும் கால்பதிக்க டிக் டாக் புதிய திட்டம்?

TiK TaK's new plan to make a comeback in India?

Advertisment

லடாக் மோதலுக்கு பிறகு, சீன நிறுவனத்தின் டிக்டாக், வி சாட்,யூசி ப்ரவுசர், ஹலோ, ஷேரிட்என இந்தியாவில் அதிகம் பயன்படுத்தும் சீன செயலிகளுக்கு, அந்த ஆப்கள் பயனாளர்களின் தகவல்களை திருடுவதாக கூறி,மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த மாதம்29-ஆம் தேதிதடைவிதித்திருந்தது.

இந்த செயலிகளில் மிகவும் முக்கியமாககவும்,அதிக பயனாளர்களையும்இந்தியாவில் கொண்டுள்ள டிக் டாக் செயலிஇந்தியாவில் மீண்டும் கால்பதிக்க புதிய திட்டம் ஒன்றை வகுத்து வருவதாகதகவல்கள் வந்துள்ளது.

அமெரிக்காவை விட இந்தியாவில், டிக் டாக் செயலிஉபயோகிக்கும் பயனர்கள்எண்ணிக்கை இருமடங்காகஇருந்தது. இந்நிலையில் இந்த தடை காரணமாக டிக்டாக் நிறுவனத்தின் தலைமை நிறுவனமானபைட்டான்ஸ் நிறுவனத்திற்கு சுமார் 45 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பீடு ஏற்படும் என்று கணிக்கப்பட்டிருந்தது. இந்தியாவைத் தொடர்ந்து, அமெரிக்காவும் டிக் டாக் செயலியை தடைசெய்ய ஆலோசித்து வரும் நிலையில், சீனாவில் இருந்து வேறு ஒரு நாட்டிற்கு தனது தலைமை இடத்தை மாற்றசெயலியின் தலைமை நிறுவனம் பைட்டான்ஸ் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisment

TiK TaK's new plan to make a comeback in India?

அதேபோல் செயலியின் வியாபாரத்தை கருத்தில்கொண்டு பல மாற்றங்களை நிர்வாக அமைப்பில் மேற்கொள்ளப்படுவதாகவும்அந்த நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். பயனாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்து,மகிழ்ச்சியான தளத்தை உருவாக்குவதே எங்கள் முதல் நோக்கம் எனவும் டிக் டாக்நிறுவனம் தெரிவித்துள்ளது.

tik tok India LADAK china
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe