7 வயது சிறுவனை இரையாக்க வந்த புலியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஐயர்லாந்து நாட்டில் உள்ள சீன் வன விலங்கு பூங்காவிற்கு இரண்டாவது படிக்கும் விகி என்ற சிறுவன் தனது தந்தையோடு சென்றுள்ளான். பூங்காவில் உள்ள வன உயிரினங்களை பார்த்த அவன், அனைத்து விலங்குகளின் தடுப்பு முன்பும் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டான்.இந்நிலையில், புலி அடைத்து வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு சென்ற அவன், தனது தந்தையிடம் தான் கூண்டிற்கு முன் நிற்பதாக கூறி, அவரை புகைப்படம் எடுக்க சில அடி தூரம் பின்நோக்கி செல்ல சொல்லிவிட்டு போட்டோவுக்கு போஸ் கொடுக்க தொடங்கியுள்ளான்.

Advertisment

தன் கூண்டிற்கு முன் சிறுவன் ஒருவன் நிற்பதை கண்ட புலி ஒன்று சிறுவன் மீது கடிக்க பாய்ந்துள்ளது. ஆனால் கண்ணாடி அறை இடையில் இருந்ததால் எந்த அசம்பாவிதமும் நடைபெறாமல் போனது. இது அனைத்தும் சிறுவனை போட்டோ பிடித்துக்கொண்டிருந்த அவனின் தந்தையின் கேமராவில் பதிவாகியது. இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.