பூங்காவில் புலி வசிக்கும் கூண்டில் இளைஞர் ஒருவர் சிக்கிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சவூதி அரேபிய தலைநகர் ரியாத்தில் புகழ்பெற்ற விலங்கியல் பூங்கா உள்ளது. அதில் புலி, சிங்கம், சிறுத்தை உள்ளிட்ட அபாயகரமான விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பூங்காவை சுற்றி பார்க்க சென்ற இளைஞர் ஒருவர் புலி இருந்த கூண்டிற்குள் குதித்துள்ளார்.
உள்ளே சென்ற இளைஞரை புலி துரத்தி துரத்தி கடிக்க ஆரம்பித்தது. இதை கண்ட ஊழியர்கள் துப்பாக்கியில் மயக்க மருந்தை செலுத்தி இளைஞரை மீட்டுள்ளனர். இந்த சம்பவத்தின் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. காயமடைந்த இளைஞரை மீட்ட ஊழியர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
Follow Us