Advertisment

ஆயிரக்கணக்கில் படையெடுக்கும் நண்டுகள்... அதிரவைக்கும் புகைப்படங்கள்

Thousands of invading crabs ... shocking photos

Advertisment

கியூபா நாட்டில் ஆயிரக்கணக்கான நண்டுகள் கடற்கரையை நோக்கிச்செல்லும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

கருப்பு, மஞ்சள், சிவப்பு நிற நண்டுகள் கியூபா நாட்டு கடற்கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. கரோனா காரணமாகக் கடற்கரையை ஒட்டியுள்ள சாலைகளில் வாகனப்போக்குவரத்து குறைந்துள்ள நிலையில், நண்டுகள் கடற்கரையை நோக்கிப் படையெடுத்து வருவதாகக் கூறப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இதுபோல் நண்டுகள் சாலையைக் கடப்பது இயல்பானது என்றாலும் இந்த ஆண்டு அந்த இயல்பை மீறி அதிக அளவில் நண்டுகள் குவிந்து வருகிறது. எதிர்பாராது வரும் வாகனங்களின் சக்கரங்களில் சிக்கும் நண்டுகள் உயிரிழக்கவும் செய்கின்றன. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Cuba
இதையும் படியுங்கள்
Subscribe