Advertisment

இங்கிலாந்தில் திருவள்ளுவர் சிலை திறப்பு; முதல்வர் வாழ்த்து!

 Thiruvalluvar statue unveiled in England; CM congratulates!

இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு நகரில் தமிழர்களின் முற்றிய ஞானத்தின் அடையாளமாகத் திகழும் உலகப் பொதுமறையாம் திருக்குறளைத் தந்த திருவள்ளுவரின் சிலை திறப்பு விழா இனிதே நடைபெற்றது

Advertisment

இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்ட்டில் உலகத் தமிழர் வரலாற்று வளாகத்தில் விஜிபி உலகத் தமிழ் சங்கத்தின் தலைவர் கலைமாமணி டாக்டர் வி.ஜி சந்தோசம் கொடையாக வழங்கியுள்ள 183-வது திருவள்ளுவர் சிலையினை ஆக்ஸ்போர்ட் மாநகரத்தின் கவுன்சிலர்கள் ஸ் ரீபன் வூட் , சூசான் அன்ட் - மாஸ்கெல் கெலன் , முன்னிலையில் விஜிபி உலக தமிழ் சங்கத் தலைவர் டாக்டர் வி ஜி சந்தோசம் அவர்கள் திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தார்.

Advertisment

உடன் பங்கேற்றோர் க்ளைடன் மேயர் அப்பு தாமோதரன் மதிமுக துணை பொதுச் செயலாளர் மல்லைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் மல்லை சி ஏ சத்யா மோரிசியஸ் மு அமைச்சர் ஆறுமுகம் பரசுராமன் , லண்டன் சிவா பிள்ளை , ஆஸ்திரேலியா எழுத்தாளர் சந்திரிகா சுப்பிரமணி , அவர்கள் , துபாய் தமிழ்ச் சங்கத் தலைவர் மொய்தீன் , கவிஞர் பாட்டழகன் , முனைவர் உலகநாயகி மற்றும் 20 நாடுகளின் பேராளர்கள் பங்கேற்றனர்

திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவிற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு க ஸ்டாலின் அவர்கள் அனுப்பிய வாழ்த்து செய்தியில் முனைவர் திரு வி ஜி சந்தோசம் அவர்களை தலைவராக கொண்ட விஜிபி உலகத் தமிழ் சங்கம் தமிழை பரப்பி சிறப்பிக்கும் மேலான பணியை செய்து வருகிறது அதன் ஒரு பகுதியாக உலகின் பல்வேறு நாடுகளில் திருவள்ளுவர் சிலையினை அமைத்து அன்னை தமிழுக்கு பெருமை சேர்ப்பது போற்றுதலுக்குரியது.

ஆக்ஸ்போர்ட் நகரில் நிகழும் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா சிறக்கவும் விஜிபி உலகத் தமிழ் சங்கத்தின் தமிழ்ப்பணி தொய்வின்றி தொடர எனது உளமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் தமிழுக்கு புகழ் சேர்க்கும் இது போன்ற முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் முனைவர் வி ஜி சந்தோசம் அவர்களுக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று வாழ்த்து செய்தியை அனுப்பினார்.

உலகெங்கிலும் திருவள்ளுவர் சிலையை நிறுவுவதே தனது முழுமூச்சியாக செய்து வருகிறேன் இன்று ஆக்ஸ்போர்ட் நகரில் இந்த திருவள்ளுவர் சிலையை நிறுவுவது விஜிபி தமிழ் சங்கத்திற்கும் தமிழ் சார்ந்த மக்களுக்கும் பெருமை சேர்க்கும் என்று வி. ஜி சந்தோசம் கூறினார். பங்கேற்ற பேராளர்களுக்கு திருக்குறள் நூலும் திருவள்ளுவர் சிலையையும் நினைவுப் பரிசாக வழங்கி சிறப்பிக்கப்பட்டனர்.

England Mallai sathya
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe