Advertisment

பாஜக நிர்வாகியின் ஃபேஸ்புக் பக்கம் ஹேக்... உட்கட்சியினரே கைது!

BJP executive's Facebook page hacked ... Two arrested!

பாஜக நிர்வாகி ஒருவர், அவருடைய ஃபேஸ்புக் பக்கத்தை சிலர்ஹேக் செய்துவிட்டதாகக் காவல்நிலையத்தில் புகாரளித்த சம்பவம் திருச்சியில் நிகழ்ந்துள்ளது.

Advertisment

திருச்சி மாவட்ட பாஜக செயலாளர் காளீஸ்வரன் என்பவர் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தின் கணக்கை யாரோ ஹேக் செய்துவிட்டதாகப் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் அவரைப் பற்றி தவறாகச் சித்தரித்து அடிக்கடி தவறான பதிவுகள் வந்த வண்ணம் உள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார்.

Advertisment

அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த சைபர் க்ரைம் ஆய்வாளர் சிந்துநதி விசாரணை நடத்தினார். விசாரணையில் ஃபேஸ்புக் பக்கத்தை ஹேக் செய்தது திருச்சி பாஜக விவசாய அணி பிரிவைச் சேர்ந்த கருமண்டபம் திலகா (50) மற்றும் மதுரையைச் சேர்ந்த ரவிக்குமார் என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

Facebook thiruchy
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe