/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Untitled-1_328.jpg)
இந்தியாவில் அண்டை நாடான இலங்கையில், சீனா பல்வேறு உள்கட்டமைப்பு பணிகளில் முதலீடு செய்து வருகிறது அதேபோல் இலங்கையின் துறை முகங்களிலும்சீனா முதலீடு செய்து வருகிறது. இது இலங்கையை பெருங்கடனில்சிக்க வைத்து, அந்தநாட்டைதனது கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்கான சீனாவின் முயற்சியாக பார்க்கப்படுகிறது. சீனாவின் கரங்களுக்குள் இலங்கை சிக்குவது இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக மாறும் என கருதப்படுகிறது.
இந்தநிலையில்இலங்கையின்நெடுந்தீவு, நயினாதீவு மற்றும் அனலைதீவு ஆகிய தமிழகத்திற்கு அருகே இருக்கும் பகுதிகளில் மின்சக்தி திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஒப்பந்தம் சீன நிறுவனம் ஒன்றுக்கு அண்மையில் வழங்கப்பட்டது, இதற்கு இந்தியா, இலங்கை அரசிடம் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக தகவல்கள் வெளியான நிலையில், மூன்றாவது தரப்பால் முன்வைக்கப்பட்ட பாதுகாப்பு தொடர்பான கவலையின் காரணமாக, மின்சக்தி திட்டத்தை ரத்து செய்வதாக சீனதூதரகம் அண்மையில் அறிவித்தது.
இந்தசூழலில்சீனா, இந்தியாவிற்குமறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த ஞாயிற்று கிழமையன்றுசீன வெளியுறவுத்துறை அமைச்சர்வாங் யி, இலங்கை பிரதமர்மகிந்த ராஜபக்சேவை சந்தித்து பேசினார். அப்போது அவர், "சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவு இரு நாடுகளின் வளர்ச்சிக்கும் நன்மை பயக்கிறது. இரு நாட்டு மக்களின் அடிப்படை நலனுக்கும் உதவுகிறது. இருநாடுகளின் நட்புறவு எந்த மூன்றாம் தரப்பினரையும் குறிவைக்கவில்லை. எந்த மூன்றாம் தரப்பினரும் இதில் (இலங்கை - சீனா நட்புறவில்) தலையிடக்கூடாது" என தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)