கடந்த மே மாதம் நடந்த சந்திப்பை தொடர்ந்து வடகொரிய அதிபர் மற்றும் தென்கொரிய அதிபர் இருவரும் மீண்டும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் மற்றும் தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் இடையே கட்ந்த எப்ரலில் முதல் சந்திப்பு நிகழ்ந்தது. அப்போது இருவரும் நட்பு பாராட்டினார்கள். இதை தொடர்ந்து மே மாதத்தில் இரண்டாவது சந்திப்பும் நிகழ்ந்தது.
இந்நிலையில், இவ்விரு நாட்டு அதிபர்களுக்கு இடையே மூன்றாவது சந்திப்பு ஏற்படுவதற்கான பேச்சுவார்த்தையில் இருநாட்டு அதிகாரிகளுக்கும் இன்று ஈடுபட்டுள்ளனர். இப்பேச்சுவார்த்தையில், அதிபர்கள் சந்தித்துக்கொள்ளும் நேரம் , இடம் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர். வடகொரியா தலைநகர் பியாங்யாங்கில் செப்டம்பர் மாதம் இச்சந்திப்பு நடைபெறலாம் என முடிவுச் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.