Skip to main content

''அன்பு, இரக்கம் நிறைந்த இந்த உலகில் வன்முறைக்கு இடமில்லை''-மன்னிப்பு கேட்டார் வில் ஸ்மித்

Published on 29/03/2022 | Edited on 29/03/2022

 

"There is no place for violence in this world of love and compassion," said Will Smith

 

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நேற்று காலை 94வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை 'கிங் ரிச்சர்ட்' படத்திற்காக வில் ஸ்மித்துக்கு கொடுக்கப்பட்டது.

 

இவ்விழாவில் வில் ஸ்மித் மனைவி ஜடா பிங்கெட் ஸ்மித்தின் முடியற்ற தலையை "ஜி.ஐ. ஜேன்" படத்தில் டெமி மூரின் தோற்றத்துடன் ஒப்பிட்டு தொகுப்பாளர் கிரிஸ் ராக் கிண்டலடித்தார். இதைக் கேட்ட வில் ஸ்மித் உடனே இருக்கையிலிருந்து எழுந்து ஆஸ்கர் மேடை ஏறி தொகுப்பாளர் கிரஸ் ராக்கை கன்னத்தில் ஓங்கி அறைந்தார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

 

இந்நிலையில் ஆஸ்கார் விழா மேடையில் கன்னத்தில் அறைந்த காமெடி நடிகரிடம் மன்னிப்பு கேட்டார் வில் ஸ்மித். தனது தவறுக்கு ஆஸ்கர் குழுவினரிடம் மன்னிப்புக் கேட்டநிலையில் கிரிஸ் ராக்கிடமும் மன்னிப்பு கேட்டுள்ளார். ''விழாவில் நான் நடந்து கொண்ட செயல் ஏற்றுக்கொள்ள முடியாதது மட்டுமின்றி மன்னிக்க முடியாதது. என் மனைவியின் தலைமுடி சிகிச்சை குறித்த ஜோக்கை ஏற்றுக் கொள்ள முடியாததால் அவ்வாறு அறைந்துவிட்டேன். அன்பு மற்றும் இரக்கம் நிறைந்த இந்த உலகில் வன்முறைக்கு இடமில்லை'' என இந்த சம்பவத்தைக் குறிப்பிட்டு இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் நடிகர் வில் ஸ்மித்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம்; நடிகையை விடுவித்த ஈரான் அரசு

Published on 05/01/2023 | Edited on 05/01/2023

 

iran hijab issue iran government released oscar actress 

 

ஈரானில் நடைபெற்று வரும் ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததற்காக கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த நடிகை தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

 

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் கடந்த  ஆண்டு செப்டம்பர் மாதம் 13 ஆம் தேதி உறவினர்களைச் சந்திக்க சென்ற 22 வயதான மாஸா அம்னி என்ற பெண் சரியாக ஹிஜாப் அணியவில்லை என்று கைது செய்யப்பட்டார். பின்னர் சிறப்புப் படை காவல் அதிகாரிகளால் கொடூரமாகத் தாக்கப்பட்ட அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார். அவரின் உடலை அவரது பெற்றோரிடம் கொடுக்காமல் காவல்துறையினரே அடக்கம் செய்ததற்கு பெரும் கண்டனங்கள் எழுந்தன. இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, உயிரிழந்த பெண்ணுக்கு நீதி கேட்டு மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வந்த நிலையில், அப்பெண்ணின் மரணத்திற்கு காரணமான ஹிஜாப் ஆடை கண்காணிப்பு சிறப்புக் காவல் படையை நீக்கி ஈரான் அரசு உத்தரவிட்டது.

 

iran hijab issue iran government released oscar actress 

 

இதற்கிடையில், தொடர் போராட்டத்தின் போது ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த  ஈரான் நாட்டைச்  சேர்ந்த நடிகையான தரனே அலி டோஸ்டி கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், இவரை ஈரான் அரசு சிறையில் இருந்து விடுவித்தது. நடிகை தரனே அலி டோஸ்டி கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான "தி சேல்ஸ்மேன்" என்ற படத்திற்காக ஆஸ்கர் விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.

 

 

Next Story

சிறந்த நடிகருக்கான ஆஸ்கரை பெற்ற வில் ஸ்மித்!

Published on 28/03/2022 | Edited on 28/03/2022

 

Will Smith wins Oscar for Best Actor

 

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று காலை 94வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா துவங்கி நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் சிறந்த இசை, சிறந்த ஒளிப்பதிவாளர், சிறந்த படத்தொகுப்பு, சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு உள்ளிட்ட 6 விருதுகளை டியூன்  திரைப்படம் பெற்றுள்ளது. சிறந்த நடிகருக்கான விருதை 'கிங் ரிச்சர்ட்' படத்திற்காக வில் ஸ்மித் பெற்றுள்ளார். இந்த படம் வில்லியம்ஸ் சகோதரிகளின் தந்தையின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். இதில்  வீனஸ்-செரினா வில்லியம்ஸ் சகோதரிகளின் தந்தையாக நடித்த வில் ஸ்மித் சிறந்த நடிகருக்கான விருதை தட்டி சென்றுள்ளார். சிறந்த இயக்குநருக்கான விருதை 'தி பவர் ஆஃப் தி டாக்' என்ற படத்திற்காக ஜேன் கேம்பியன் பெற்றுள்ளார். சிறந்த பாடலுக்கான விருதை ஜேம்ஸ் பாண்ட் படமான 'நோ டைம் டு டை' பெற்றுள்ளது. இதற்கான ஆஸ்கர் விருதை  பில்லி எலீஸ், ஃபின்னியாஸ் ஓகானல் பெற்றுள்ளனர்.