Advertisment

fgfcgcgf

சென்னை விமான நிலையத்திற்கு சிங்கக்குட்டியுடன் வந்த தாய்லாந்து பெண்ணை விமான நிலைய அதிகாரிகள் பிடித்துள்ளனர். இன்று காலை தாய்லாந்திலிருந்து சென்னை வந்த விமானத்தில் பெண் ஒருவர் சிங்கக்குட்டியுடன் விமானத்தில் வருவதாக தகவல் கிடைத்தது.

Advertisment

இதனைத்தொடர்ந்து அந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். நிலையில் இளம்பெண் ஒருவர் பையில் சிங்கக்குட்டியை வைத்து கொண்டு வந்தது கண்டறியப்பட்டு அது பறிமுதல் செய்யப்பட்டது.

இந்நிலையில் தற்போது அந்த பெண்ணை மீண்டும் தாய்லாந்திற்கே திருப்பி அனுப்ப பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் சிறிது நேரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.